Saturn Transit: சனி அஸ்தமனம்- இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்டகாலம் ஆரம்பம், பிரச்சனைகள் அதிகரிக்கும்

Saturn Transit Benefits in Tamil: சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த காலத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2024, 03:59 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் புதிய வேலைகளை செய்து பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரிக்கலாம்.
  • ஆனால், இந்த ஆர்வம் உங்களை சிக்கலிலும் சிக்க வைக்கக்கூடும்.
  • புதிய பணிகளை துவங்கும் முன் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
Saturn Transit: சனி அஸ்தமனம்- இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்டகாலம் ஆரம்பம், பிரச்சனைகள் அதிகரிக்கும் title=

Saturn Transit Benefits in Tamil: கிரகங்களின் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சில கிரகங்களில் ஏற்படும் இப்படிப்பட்ட மாற்றங்கள் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான கிரகங்களில் சனி பகவானும் ஒருவர்.

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும். அவரது சிறிய அசைவுகளும் பல மாற்றங்களை ஏற்படுத்டும். சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். பிப்ரவரி 11 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். 

சனி அஸ்தமனத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் பாதம் முடிவுக்கு வரும். இது தவிர மீன ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனியின் முதல் பாதமும் தொடங்கவுள்ளது. 

சனி அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகள் இந்த காலத்தில் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இவர்கள் அனைத்து பணிகளிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சனி அஸ்தமனத்தால் பிரச்சனைகளை எதிர்கொள்ளப்போகும் ராசிகள்

மேஷம் (Aries)

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் மேஷ ராசி ஜாதகத்தின் 11 ஆவது ஸ்தானத்தில் அஸ்தமனமாகவுள்ளார். சனி அஸ்தமன காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை பாதிக்கப்படும். பண வரவு தடைபடும். கடன் வாங்க நேரிடலாம். ஆனால், அனைத்து பணிகளிலும் ஒரு வகையான தாமதம் ஏற்பட்டாலும், பின்னர் அனைத்தும் வெற்றிகரமான நிறைவடையும். வேலை விஷயத்தில் காரியங்கள் தடைபடலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் இருக்காது. ஜாக்கிரதையாக இருந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகள் மீது குரு பார்வை, கோடீஸ்வர யோகம் ஆரம்பம்

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு பணி இடங்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய வேலை தேடும் நிர்பந்தத்துக்கு நீங்கள் ஆளாகலாம்.  ஆனால் புதிய வேலை உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். வர்த்தகர்களுக்கு இந்த நேரத்தில் நஷ்டம் அதிகமாகலாம். புதிய ஆர்டர்களை எடுக்கும் முன்னர் சற்று யோசித்து பின்னர் முடிவு செய்யவும்.  உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் புதிய வேலைகளை செய்து பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரிக்கலாம். ஆனால், இந்த ஆர்வம் உங்களை சிக்கலிலும் சிக்க வைக்கக்கூடும். புதிய பணிகளை துவங்கும் முன் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நட்புகளின் அறிமுகமும் இந்த காலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடையே மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். முடிந்த வரை இப்படிப்பட்ட வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | 18 ஆண்டுக்கு பிறகு இணையும் ராகு - சூரியன், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News