வாழ்க்கையை ருசிகரமாக மாற்றும் ருசக யோகம்! ஜாலியாய் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

Ruchak Yog 2024: மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெறுவதால் ருசக யோகம் உருவாகப்போகிறது. செவ்வாய் தசையில் இருக்கும்போது அருமையான பலன்களைத் தரும் ருசக யோகத்தால் பயன் பெறும் ராசிகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2024, 07:55 AM IST
  • ருசக யோகத்தால் பயன் பெறும் ராசிகள்...
  • செவ்வாய் தசையில் அதிர்ஷடம் பெறும் ராசிக்காரர்கள்
  • 4 ராசிகளுக்கு ஏற்றம் தரும் ருசக யோகம்
வாழ்க்கையை ருசிகரமாக மாற்றும் ருசக யோகம்! ஜாலியாய் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!

செவ்வாய் கிரகம் 15 மாதங்களுக்குப் பிறகு மகர ராசியில் நுழைந்துள்ளது. செவ்வாயின் இந்தப் பெயர்சியால் உருவாகும் ராஜயோகம் ருசக யோகம் எனப்படும்.மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் இந்த யோகம், மார்ச் 15ம் தேதி தொடரும். மகர ராசியில் இருக்கும் செவ்வாய் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறு பாதிப்புகளைக் கொடுத்தாலும் சில ராசிகளுக்கு (Zodiac Signs) மட்டும் வாழ்க்கையை ருசிகரமாய் மாற்றும் ருசக யோகத்தைக் கொடுக்கிறார்.

Add Zee News as a Preferred Source

ருசக யோகம்

மேஷம், கடகம், துலாம், மகரம்,  ரிஷபம்,  சிம்மம், விருச்சிகம்,  கும்பம் என எட்டு லக்கினங்களுக்கு ருசக யோகம் ஏற்படும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றுக்கு ருசக யோகம் கிடையாது.  லக்கினத்திற்கு, 4, 7, 10 ஆகிய இடங்களில்  செவ்வாய் அமையும்போது ருசக யோகம் உருவாகிறது. சனியின் வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் ருசக யோகம் உருவாகப்போகிறது. செவ்வாய் தசையில் இருக்கும்போது ருசக யோகம் அருமையானதாக இருக்கும்.  

செவ்வாய்ப் பெயர்ச்சி

செவ்வாய்ப் பெயர்ச்சியால் உருவாகும் இந்த ருசக ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பணம், செல்வம் மற்றும் சொத்து வகையில் சிறப்பான பலன்களை தரும் இந்த யோகம், தொழிலில் முன்னேற்றத்தையும் தரும்.

மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

மேஷம்

இத்தனை நாள் இருந்ததைவிட, உங்களின் தைரியமும் உத்வேகமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் மலையாக தோன்றும் பணிகளையும் சுலபமாக முடிப்பீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும், வாழ்க்கையில் இருந்துவந்த இறுக்கங்களை குறைக்கும் ருசக யோகம், இனி உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை வீடும்.
 
ரிஷபம்

ருசக ராஜயோகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறலாம். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வேலை விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபத்தைக் கொடுக்கும். புதிய நட்புகளும் உறவுகளும் மன நிம்மதியை அதிகரிப்பார்கள்.
 
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ருசக ராஜயோகத்தால், பொருளாதாரம் வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், சொத்து வாங்க, விற்க நல்ல நேரம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிற்கும் சாதகமான சூழ்நிலையை இந்த யோகம் உருவாக்கிக் கொடுக்கும்.

சிம்மம் : உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஆறாமிடத்தில் இருப்பதால் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். வீடு,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாயின் ருசக யோகம் கைக் கொடுத்தாலும், கண்டச்சனி காலம் என்பதால் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 75 ஆண்டுக்கு பின் சுக்கிரன், சனி, செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பண வரவு, பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News