72 மணி நேரம்..ஆபத்தான கிரகண யோகம்! இந்த ராசிகளுக்கு பண நஷ்டம் ஏற்படும்

Surya Rahu Yuti 2023: கிரகங்களின் ராஜாவான சூரியன் 14 ஏப்ரல் 2023 அன்று பெயர்ச்சி அடைகிறார். சூரியன் மேஷ ராசிக்கு மாறுவார், மறுபுறம் ராகு ஏற்கனவே இதே ராசியில் தான் இருக்கிறார். மேஷ ராசியில் சூரியனும் ராகுவும் இணைவதால் கிரகண யோகம் உண்டாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 03:00 PM IST
  • ராகு-சூரிய சேர்க்கையான கிரகண யோகம் உருவாகிறது.
  • 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார்.
  • பல கிரகங்கள் மேஷ ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன.
72 மணி நேரம்..ஆபத்தான கிரகண யோகம்! இந்த ராசிகளுக்கு பண நஷ்டம் ஏற்படும் title=

மேஷத்தில் சூரியன் ராகு சேர்க்கை: கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. இந்நிலையில் மேஷ ராசியில் ஏற்கனவே ராகு இருந்து வருகிறார். இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியனும் மேஷ ராசிக்குள் செல்கிறார். ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. ராகு சூரிய சேர்க்கையானது சற்று பிரச்னைகளைத் தரும். இதனால் ராகு-சூரிய சேர்க்கையான கிரகண யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் கிரகண யோகம் அசுபமாக கருதப்படுகிறது. இந்த அசுப யோகத்தின் பலன் 12 ராசிகளுக்கும் பாதிப்பை தரும். மறுபுறம், சனியின் மூன்றாவது பார்வை சூரியன் மீது இருக்கும். சூரியனும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் இதுவும் நல்லதல்ல. இதன் காரணமாக, ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரையிலான நேரம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே இப்போது ஏப்ரல் மாதத்தில் உருவாகும் கிரகண யோகத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்: சூரியன், ராகு சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. இவர்களின் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதனுடன், ஏதேனும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.

மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகண யோகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும். பட்ஜெட் கெட்டுப் போகலாம். உடல்நலத்தில் பிரச்சனை வரலாம். வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தை உறுதி செய்யலாம். இதய நோயாளிகள் தங்களைக் கவனித்துக்கொள்ளவும். வாழ்க்கைத் துணையுடன் பிரிவினை ஏற்படலாம்.

விருச்சிகம்: சூரியன், ராகு இணைவதால் விருச்சிக ராசிக்காரர்களை சில விஷயங்களில் சிக்க வைக்கலாம் அல்லது கோர்ட் வழக்கில் சிக்கலாம். நீங்கள் நோய், எதிரி, தெரியாத பயம் அல்லது வேலையில் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்: சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். இந்த நபர்கள் பணத்தை கொடுக்கும்போது அல்லது வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும், அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், கவனமாக இருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு - புதன் சேர்க்கையால் வந்தாச்சு ஜாக்பாட்..! இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News