குரு - புதன் சேர்க்கையால் வந்தாச்சு ஜாக்பாட்..! இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி

குரு - புதன் சேர்க்கையால் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குப் பிறகு 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையில் புதிய ஒளி உண்டாகி, வாழ்க்கை தரமும் உயரும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 07:00 PM IST
  • குரு - புதன் சேர்க்கையால் நல்ல காலம் பிறக்கப்போகிறது
  • 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும் பொருளாதாரமும் கிடைக்கும்
குரு - புதன் சேர்க்கையால் வந்தாச்சு ஜாக்பாட்..! இந்த ராசிக்காரர்கள் இனி லட்சாதிபதி title=

கிரகநிலை மாற்றங்களின்படி புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் சேரப்போகின்றன. இந்த இரு கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகளின் நிலையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத நல்ல காலம் பிறக்கப்போகிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கான வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார நிலை புதிய உயரத்தை எட்டப்போகிறது.   

மேஷம்

குரு மற்றும் புதன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த நேரத்தில் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். திருமண வாழ்வில் இனிய உறவுகள் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். கூட்டு முயற்சியில் செய்யும் வேலை வெற்றியை தரும்.

மேலும் படிக்க | சனி பார்வை..இந்த ராசிகளுக்கு சனியின் பார்வையால் பம்பர் ஜாக்பாட்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் புதன் இணைவது சுப பலன்களைத் தரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், அதன் மூலம் பண பலன்கள் மற்றும் பொருளாதார நிலை வலுப்படும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற கனவு இந்த நேரத்தில் நிறைவேறும். பழைய முதலீட்டில் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். லாட்டரி, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சிறந்த நேரம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் புதன் இணைவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் போது இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

மேலும் படிக்க | 48 மணி நேரம் கழித்து இந்த ராசிகளுக்கு சுக்கிரன் வர்க்கோத்தமம் பண பலத்தை தரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News