ஒரே ராசியில் 2 பெரிய கிரகங்கள்: டிசம்பரில் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், ஜாக்கிரதை

December Horoscope: டிசம்பர் மாதத்தில் சுக்கிரனும் சூரியனும் 13 நாட்கள் மகர ராசியில் சஞ்சரிப்பது சிலருக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2022, 06:38 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் தகராறுகள் மற்றும் சண்டைகளும் வர வாய்ப்புகள் உள்ளன.
  • கண் சம்பந்தமான நோய்களும் வரலாம்.
ஒரே ராசியில் 2 பெரிய கிரகங்கள்: டிசம்பரில் இந்த ராசிகளுக்கு இக்கட்டான நேரம், ஜாக்கிரதை title=

டிசம்பரில் கிரக மாற்றங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் ஜோதிட ரீதியாக பல முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதோடு சிலருக்கு இது பாதகமான பலன்களையும் தரப்போகிறது. டிசம்பரில் 13 நாட்களுக்கு இரண்டு பெரிய கிரகங்கள் ஒரே ராசியில், மகர ராசியில் இருக்கும். இது பல ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும். இரு பெரிய கிரகங்கள் மகர ராசியில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு சிக்கலான சூழல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். 

ஜோதிட சாஸ்திரப்படி, டிசம்பர் மாதத்தில் சுக்கிரனும் சூரியனும் 13 நாட்கள் மகர ராசியில் சஞ்சரிப்பது சிலருக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் நான்காம் ஸ்தானத்தின் அதிபதியாக இருக்கிறார். இந்த கோச்சாரத்தால் சஞ்சாரத்தில் இருந்து எட்டாம் வீட்டில் இருப்பார். மறுபுறம், சுக்கிரன் லக்னம் மற்றும் ஆறாவது வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். சஞ்சரிக்கும் நேரத்தில், சுக்கிரன் ஜாதகத்தின் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த கிரக நிலைகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். உடல் நலனில் சிறிய பிரச்சனை வந்தாலும், அதை அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லையெனில் இது பெரிய பிரச்சனைகு வழிவகுக்கக்கூடும்.

மேலும் படிக்க | புதிய வீடு, கார், செல்வம்: புத்தாண்டில் கலக்கப்போகும் ராசிகள் இவைதான் 

மிதுனம்

சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிக்கும் நேரத்தில், மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் இருப்பார், மேலும் சூரியனும் இந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த அமைப்பால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உறவுகள் கெட்டுப் போகலாம். இன்னும் பல மாற்றங்களுக்கான யோகமும் உருவாகி வருகின்றது. 

கடகம் 

கடக ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரிய பகவானும் சுக்கிரனும் சஞ்சாரம் செய்யும் போது ஆறாம் வீட்டில் இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறுகள் மற்றும் சண்டைகளும் வர வாய்ப்புகள் உள்ளன. கண் சம்பந்தமான நோய்களும் வரலாம். உங்கள் சமூகப் பிம்பமும் கெடக்கூடும்.

சிம்மம் 

இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரிய பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார், சுக்கிரனும் சஞ்சாரத்தின்போது ஐந்தாம் வீட்டில் இருப்பார். சூரியபகவானின் இந்த ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்கள் வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இது சண்டையாக உருவெடுக்கலாம். ஆகையால் பொறுமையாக இருப்பது மிக நல்லது.

மேலும் படிக்க | Astro: அறிவாற்றலை அள்ளித் தரும் 'புதன் கிரகம்' வலுவாக இருக்க செய்ய வேண்டியவை! 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News