Astro Traits: பணத்தை ‘எண்ணி எண்ணி’ செலவழிக்கும் மனம் கொண்ட ராசிகள் இவை தான்!

ராசிகளின் இயல்புகள்: ஜோதிடத்தில், 12 ராசிகளுக்கும் சொந்தக்காரர்களின், தன்மைகள், ஆளுமை பண்புக, தனிப்பட்ட குணநலன்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2022, 08:01 PM IST
  • மற்றவர்களுக்குச் செலவு செய்யும் முன் ஆயிரம் முறை யோசிப்பார்கள்.
  • தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க மாட்டார்கள்.
  • பணத்தைச் சேமிக்கும் இந்தப் பழக்கம் இருப்பதால், பணம் சேருகிறது.
Astro Traits: பணத்தை ‘எண்ணி எண்ணி’ செலவழிக்கும் மனம் கொண்ட ராசிகள் இவை தான்! title=

பணக்காரர் ஆக வேண்டும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் ஆசை. ஆனால், தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் காரணமாக, சில நேரங்களில் அவர்களை பணக்காரர்களாகவும், சில நேரங்களில் ஏழைகளாகவும் ஆக்குகின்றன. அன்னை லக்ஷ்மி தேவி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அருளை அள்ளி வழங்குவதால், அவர்கள் வாழ்க்கையில் மகத்தான செல்வத்தையும் செழிப்பையும் பெறுகிறார்கள். மறுபுறம், சிலர் தங்கள் கெட்ட பழக்கங்கள் மற்றும் தவறுகளால் தங்கள் சொத்துக்களை இழக்கிறார்கள். இங்கூ குறிப்பிட்டுள்ள 4 ராசிக்காரர்களுக்கு சிக்கனமாக இருப்பதால், இவர்களிடம் பணம் தங்குகிறது. இந்த ராசிகள் எப்பொழுதும் பணத்தை சிக்கனமாக செலவழிக்கிறார்கள். இந்த குணம் காரணமாக அவர்கள் வங்கி இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பணப் பற்றாக்குறை என்பதையே அனுப்பவிக்காத ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் ஆழ்ந்து யோசனை செய்த பின்னரே செலவு செய்வார்கள். பணத்தை செலவழிக்கும் முன் கண்டிப்பாக ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்வார்கள். குறிப்பிட்ட இடத்தில் பணம் செலவு செய்வது சரி தான் என்றாலும், யோசித்தே செய்வார்கள். அவரது இந்த பழக்கத்தால், குறுகிய காலத்தில் அவர்களது வங்கி இருப்பு அதிகரிக்கிறது. இந்த சிக்கனப் பழக்கத்தால், அவருக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்கள் பணம் சேர்ப்பதில் வல்லவர்கள். அவர்களை கஞ்சன் என்று பெரிய அளவில் அழைப்பதும் சரிதான். தமக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் மிகுந்த சிந்தனையுடன் பணத்தைச் செலவிடுகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு வைப்பவர்கள், இவர்களிடம் ஊதாரித்தனத்தை எதிர்பார்ப்பது வீண். இந்த ராசிகள் தங்கள் வாழ்க்கையில் நிறைய பணம் சேமிப்பார்கள்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2023: இனி ‘இவர்கள்’ வாழ்க்கையில் ஏற்றம் தான்!

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுக்கு வேண்டிய பணத்தைச் செலவழிப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்குச் செலவு செய்யும் முன் ஆயிரம் முறை யோசிப்பார்கள். இருப்பினும், அவர்கள் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க மாட்டார்கள். பணத்தைச் சேமிக்கும் இந்தப் பழக்கம் இருப்பதால், இவர்களிடம் பணம் சேருகிறது.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், கடின உழைப்பின் மூலம் பணம் குவியும். அவர்கள் பணத்தையும் மிகவும் கவனமாகச் செலவிடுகிறார்கள். பண விரயம் அல்லது அனாவசிய செலவுகளை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, பல சமயங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட பணத்தைச் செலவிட யோசிப்பார்கள். இதனால் இவர்களும் நிறைய பணத்தை சேமிக்கிறார்கள். ஆனால் பொதுவாக அந்த பணத்தை அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை.

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் புத - ஆதித்ய யோகம்; உச்சத்தை தொடப்போகும் ‘6’ ராசிகள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News