கர்ம கணக்குகளை தயவு தாட்சண்யம் இன்றி பைசல் செய்யும் சனீஸ்வரர்

Saturn Transit and Navagrahas: ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவக்கிரக நாயகர் சனிதேவர், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நீதி வழங்கும் நீதியின் தேவர்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2022, 09:19 PM IST
  • வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர சிக்கல்கள் விலக சனீஸ்வரரை வணங்கவும்
  • சமூகத்தில் மரியாதையை போக்குபவரும் சனீஸ்வரரே
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை கெடுப்பவரும் சனீஸ்வரர்
கர்ம கணக்குகளை தயவு தாட்சண்யம் இன்றி பைசல் செய்யும் சனீஸ்வரர் title=

புதுடெல்லி: கர்ம நாயகன் என்றும் காலபுருஷ தத்துவத்தின் கர்மஸ்தானாதிபதி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லும் நவக்கிரக நாயகர் சனிதேவர். ஒரு செயலை பிற எட்டு கிரகங்கள் அணுகும் விதத்திற்கும் சனீஸ்வரர் அணுகும் விதமும் மாறுபடும். நாம் ஒரு செயலை செய்யும்போது, சூரிய பகவான், சந்திர பகவான், குரு பகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான், புத பகவான் மற்றும் ராகு,கேது பகவான் அதற்கான பலன்களை வழங்குவது அவரவர் கிரக நிலைக்கு ஏற்றவாறு இருக்கும். ஆனால், சனீஸ்வரர் பகவான் நாம் செய்யும் செயல்களை ஒரு நீதிபதியை போல நடுநிலைமையில் இருந்து பலன்களை வழங்குவார். 

கர்ம கணக்குகளை சரி பார்த்து, தயவு தாட்சண்யம் இன்றி தீர்ப்பு வழங்கும் சனி பகவானின் பெயரே அனைவரையும் நடுங்க வைக்கிறது. சனீஸ்வரரை சாந்திப்படுத்த பல பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், பாவங்களை செய்யாமல் இருப்பதே முழு முதல் பரிகாரமாக இருக்கும். சிவனை அடிபணிந்து, நற்செயல்களை செய்வதே சனியின் தாக்கத்தை மட்டுப்படுத்தும், நற்பலன்களை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி: தீபாவளி முதல் அமோக வாழ்க்கையை பெறும் ‘5’ ராசிகள்!

நீதியின் கடவுள் சனீஸ்வரர், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருவதை, இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றும் அவரது நகர்வின் அடிப்படையில் ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.  2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளார்.

ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனி காலம் துவங்கியது. சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார்.இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான இயக்கத்துக்கு மாறுவார்.

2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். இந்த மாற்றங்கள் அனைவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்! 

என்ற மந்திரம் சனீஸ்வரரின் கோபத்தைக் குறைத்து நிவாரணம் அளிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | சுபகிருது ஆண்டின் புரட்டாசி மாத ராசிபலன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News