குபேர அருளால் இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்

Kuber God Grace: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று தானம் செய்வது மிகவும் முக்கியம். இன்று உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 20, 2022, 09:06 AM IST
  • தர்மம் செய்வதால் பல மாற்றங்கள் ஏற்படும்
  • மூன்று ராசிக்காரர்கள் இன்று தானம் செய்தால் நன்மை
  • இன்றைய ராசிகளின் நிலை மற்றும் கிரகங்களின் இயக்கம்
குபேர அருளால் இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும் title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஏதோ ஒரு அதிபதி கிரகம் இருக்கும், இந்த கிரகங்களின் தாக்கம் அந்தந்த ராசிக்காரர்கள் மீது விழுகிறது. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில சிறப்புகள் உண்டு. அதன்படி தர்மம் செய்வதால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்த்திரம் கூறுகின்றது. இது எப்போதும் நேர்மறையான முடிவுகளை நமக்குத் தருகிறது. ஒருவரின் ஜாதகப்படி தானம் செய்தால், அது கிரகங்களின் இயக்கத்தை நேரடியாக பாதிக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றே உங்கள் ஜாதகப்படி தானம் செய்யுங்கள். குறிப்பாக இந்த மூன்று ராசிக்காரர்கள் இன்று தானம் செய்வது மிகவும் அவசியம் ஆகும். இன்று உங்கள் ராசிபலன் என்ன சொல்கிறது என்பதை இங்கே விரிவாக காண்போம். 

இன்றைய ராசிகளின் நிலை மற்றும் கிரகங்களின் இயக்கம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் புதிய திட்டத்தில் முதலீடு செய்ய உகந்த தினம். லாபம் சாத்தியம் ஆனால் தாமதமாக பெறலாம். நிலுவையில் உள்ள வேலைகளை தீர்த்து வைப்பதில் வெற்றி கிடைக்கும். 

மேலும் படிக்க | ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ரிஷபம்: முயற்சியை விட லட்சியம் தீமை தரும். புதிய செயல்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மனைவியுடன் உறவில் இனிமை இருக்கும்.

மிதுனம்: சமூக விஷயங்களில் உங்களை விமர்சிக்கலாம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். குழந்தைகள் கவலை அடைவார்கள். மன அமைதிக்கு சனி வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்களின் வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் நிலைமை சுமாராக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கோபம், உற்சாகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்: வரும் வேலைகளில் ஏற்படும் இடையூறுகளால் மனம் கலங்கும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். ஆக்கப்பூர்வமான செயல்களின் பலனைப் பெறுவீர்கள்.

கன்னி: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்: தொழில் வரவு நின்று போகலாம். நிதி நிலையில் இருவழிச் சிக்கல்கள் இருக்கும். இரத்தக் கோளாறுகள் ஏற்படலாம்.

விருச்சிம்: பங்குகளில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள், திடீர் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்களுடன் தகராறு அல்லது நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு.

தனுசு: குடும்பத்தில் உள்ள அனைவரின் நடத்தையும் எதிர்பாராத விதமாக மாறும். வேலையை சரியாக செய்யாததால் மன அழுத்தம் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளால் பதற்றம் ஏற்படலாம்.

மகரம்: இன்று நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எந்த பெரிய மாற்றமும் சாத்தியம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

கும்பம்: சிறு வேலைகளில் அலட்சியம் கெடுதல் தரும். யாருடைய புகாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். உடல்நலக் கோளாறுகள் திடீரென அதிகரிக்கலாம்.

மீனம்: வீட்டு ஏற்பாடுகளுக்கு முயற்சிகள் எடுக்க வேண்டி வரும். பணிபுரியும் இடத்தில் சிலரது நடத்தையால் உங்களுக்கு இடையூறு ஏற்படலாம். வேலையில் தடங்கல் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News