ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

Venus transit 2022: ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. சுக்ரன்  கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2022, 12:09 PM IST
  • ரிஷப ராசியில் சுக்கிரனின் பிரவேசம் தொழிலில் சிறந்த பலனைத் தரும்.
  • நிதி நிலைமையில் ஏற்றம் ஏற்படலாம்.
  • தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள்.
ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்;  பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள் title=

ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு தனி இடம் உண்டு. சுக்ரன்  கிரகம் ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். இந்த கிரகம் அசுப நிலையில் இருந்தால், அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் வறுமையில் வாழ்கிறார். அதோடு, அவரது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை கூட நன்றாக இருக்காது.

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றத்தின் போது, அதன் தாக்கம், அனைத்து  ராசிகளிலும் இருக்கும். சனி பெயர்ச்சியை, குரு பெயர்ச்சியை போலவே, சுக்கிரனின் பெயர்ச்சியும், மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சுகரனின் சஞ்சாரம் மக்களின் நிதி நிலை, மகிழ்ச்சி, காதல் வாழ்க்கையை பாதிக்கிறது. 

வரும் ஜூன் மாதம் 18ம் தேதி சுக்கிரன் தனது பிரியமான ராசியான சுக்கிரனுக்குள் பிரவேசிக்க உள்ளார். ரிஷப ராசியில் சுக்கிரன் நுழைவது சிலருக்கு மிகவும் சாதகமாக அமையும். சுக்கிரன் இந்த ராசி மாற்றத்தினால், சில ராசிக்காரர்கள் பண மழையில் நனைவார்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம், நிதி வகையில் ஆதாயம் அடைவார்கள். தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். அவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். வராமல் இருந்து கடனையும் மீட்டெடுப்பார்கள். கூட்டாண்மையில் வேலை செய்பவர்களும் ஆதாயம் அடைவார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கும் இந்த நேரம் நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் எல்லா வகையிலும் நன்மைகளைத் தரும்.

மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் பல நன்மைகளை தரும். அவர்களின் வருமானமும் அதிகரிக்கும், எதிர்பாராத பணமும் கிடைக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.  புதிய ஒப்பந்தம் செய்யலாம். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயணம் செல்ல கூடும். நீங்கள் கூட்டாக வேலை செய்ய விரும்பினால், இது ஒரு நல்ல நேரம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்.

சிம்மம்: 

ரிஷப ராசியில் சுக்கிரனின் பிரவேசம் தொழிலில் சிறந்த பலனைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு-உயர்வு கிடைக்கலாம். முன்பு வேலை மாற்றம் பற்றி பேசப்பட்டிருந்தால், அது இப்போது செய்யப்படும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. நல்ல வேலையைச் செய்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். பணம் சாதகமாக இருக்கும். நிதி நிலைமையில் ஏற்றம் ஏற்படலாம், இது உங்கள் வாழ்க்கையில் வசதிகளை அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News