புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டு பணம், புகழ் அனைத்தும் இந்த ராசிகளின் வசம்

Lucky Zodiacs of New Year 2023: அடுத்த ஆண்டு யாருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது? யாருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கவுள்ளன? 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 06:40 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
  • நீங்கள் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டு பணம், புகழ் அனைத்தும் இந்த ராசிகளின் வசம் title=

2023 ஆம் அண்டின் அதிர்ஷ்டமான ராசிகள்: மகிழ்ச்சியும் துக்கமும் நம் வாழ்வில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் மாற்றத்தால், நம் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் துக்கம் என இவை இரண்டும் மாறி மாறி வரும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. 

2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. கிரக மாற்றங்களின் அடிப்படையில் இந்த புத்தாண்டு சில ராசிகளுக்கு மிகவும் அமோகமாக இருக்கும். எனினும், சில ராசிகள் சில சோதனைகளை சந்திகக் நேரிடும். 2023 ஆம் ஆண்டில் 3 ராசிகள் மிக அதிர்ஷ்டக்கார ராசிகளாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அடுத்த ஆண்டு யாருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது? யாருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கவுள்ளன? 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2023-ம் ஆண்டு ஜொலிக்கும்

1. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த வாய்ப்புகள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். உங்கள் வேலையில் சமரசம் செய்யாமல் இருந்தால் பல முன்னேற்றங்களைக் காண முடியும். உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.

2. துலாம்

துலா ராசிக்காரர்களுக்கு அன்பு, அதிர்ஷ்டம் மற்றும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் இது சிறந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இது தவிர பல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

மேலும் படிக்க | குருவின் அருளால் புத்தாண்டில் செல்வ மழையில் நனையும் ‘சில’ ராசிகள்! 

ஆன்மிகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையைப் பொறுத்தவரை, புத்தாண்டு உங்களுக்கு இந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

3. மிதுனம்

மிதுன ராசியினருக்கு புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலத்தால் உங்கள் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இது மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். உங்கள் பயணம் உங்களுக்கு பல அனுகூலமான விளைவுகளை கொடுக்கும்.

இந்த ஆண்டு உங்கள் மரியாதை அதிகரிக்கும். வித்தியாசமான நேர்மறை ஆற்றல் உங்களுக்குள் புழங்கும். எந்த வேலையைச் செய்ய முடிவெடுத்தாலும் அந்த வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மிகவும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | கும்பத்திற்கு செல்லும் சனி: ஷஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News