கும்பத்திற்கு செல்லும் சனி: ஷஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும்

Saturn Transit in January 2023: சனியின் மாற்றத்தால் சில ராசிகளுக்கு மிகவும் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 01:24 PM IST
  • மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி மகர ராசிக்கு அதிபதியாவார்.
  • சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும்.
  • வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
கும்பத்திற்கு செல்லும் சனி: ஷஷ ராஜயோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், தொட்டது துலங்கும்  title=

சனிப்பெயர்ச்சி 2023 ராசி பலன்கள்: நீதியின் கடவுளான சனி 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் கும்ப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு என்றாலும், சனிப்பெயர்ச்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் உள்ளது. சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. சனியின் பெயர்ச்சியால் ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த ராஜயோகமாகக் கருதப்படுகிறது. 

30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் மாறுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளுக்கு மிகவும் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறலாம். இந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தால் வலுவான பலன்களைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: 

சனிப்பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும்.

மேலும் படிக்க | 2023 ஜனவரி 17ம் தேதி சனிப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகளும் பரிகாரங்களும் 

ரிஷபம்: 

சனியும், ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனும் நட்பு கிரகமாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் மிகவும் சுபமாக இருக்கும். சனியின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

கன்னி: 

சனியின் சஞ்சாரத்தால் உருவாகும் ஷஷ ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல வகையிலும் நன்மைகளைத் தரும். சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் தற்போது நடந்துமுடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்: 

மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்கும் சனி மகர ராசிக்கு அதிபதியாவார். ஆகையால், சனி பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள்.

கும்பம்: 

சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கவுள்ளார். இது ஷஷ ராஜயோகத்தை உருவாக்கும். இந்த யோகத்தினால் உருவாகும் மிகப்பெரிய நன்மை கும்ப ராசிக்காரர்களுக்கே கிடைக்கும். இவர்களின் அனைத்து பணிகளும் அதிர்ஷ்டத்தின் துணையுடன் வெற்றிகரமாக முடிவடையும். பழைய பிரச்னைகள் அனைத்தும் தீரும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சியால் பணத்தை அள்ளும் லக்கி ராசிக்காரர் நீங்களா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News