புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

New Year 2023 Lucky Zodiacs: ஜோதிடத்தின் பார்வையில், புத்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். இவர்கள் பல விதமான பலன்களைப் பெறுவார்கள், பலவிதமான பிரச்சனைகள் தீரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2022, 07:35 PM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • இந்த ஆண்டு தொழில் மற்றும் பணத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • இந்த ஆண்டு உங்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கும்.
புத்தாண்டு ராசிபலன்: 2023-ல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஜொலிக்கும், அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

2023 புத்தாண்டு ராசி பலன்: 2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த புத்தாண்டிலும் கிரகங்கள் மற்றும் ராசிகளின் மாற்றம் இருக்கும். இந்த மாற்றங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஜோதிடத்தின் பார்வையில், புத்தாண்டு அதாவது 2023 ஆம் ஆண்டில் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டம் இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம். இவர்கள் பல விதமான பலன்களைப் பெறுவார்கள், பலவிதமான பிரச்சனைகள் தீரும். 

2023 ஆம் ஆண்டின் லக்கி ராசிகள்:

விருச்சிக ராசிக்காரர்களின் கனவு நிஜமாகும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு வரப்பிரசாதமாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டு அவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த வருடம் உங்களின் அனைத்து வேலைகளும் வெற்றியடையும். இதில் முழு பலன் கிடைக்கும். 

எந்த விதமான முன்னேறத்தை பெறவும், தரத்தில் எந்த விதமான சமரசத்தையும் செய்யாதீர்கள். வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுங்கள். இது உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில் ரீதியாகவும் இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் நனவாகும், அன்பு மேலோங்கும்.

மேலும் படிக்க | சுக்கிரனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு தொழில், வியாபாரத்தில் ஜாக்பாட்!! 

துலாம் ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த ஆண்டு தொழில் மற்றும் பணத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்புகள் கிடைக்கும். அதை நீங்களும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். 

புதிய சாதனைகளை செய்வீர்கள். வியாபாரம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மிகுந்த அச்சமின்றி உங்கள் குறிக்கோளைப் பின்பற்றி வெற்றியை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

2023 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை அடைவார்கள் 

ஜோதிடத்தின் கணிப்புகளின்படி, 2023 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வருடம் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். திருமணப் பேச்சுக்கள் வெற்றியடையும். 

மாணவர்கள் படிக்க முழு வாய்ப்பு கிடைக்கும். அதை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எங்கும் அன்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். 

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த '4' ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News