ராசி பெயர்ச்சி: 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ராசியில் மூன்று சுப கிரகங்கள்

செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கும் ராசி பெயர்ச்சியில் 3 ராசிகள் ஒரே கிரகத்தில் சேரும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 20, 2022, 06:36 AM IST
  • செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் ராசிப் பெயர்ச்சி
  • 3 கிரகங்கள் ஒரே நாளில் சேரும் ஆபூர்வ நிகழ்வு
ராசி பெயர்ச்சி: 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ராசியில் மூன்று சுப கிரகங்கள்  title=

Navarathiri 2022: எப்போதும் போலவே, இந்த முறையும் நவராத்திரி விழா மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போகிறது. செப்டம்பர் 24-ம் தேதி இந்த முறை அப்படி ஒரு அபூர்வசெயல் நடக்கப் போகிறது. 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது. கன்னி ராசியில் சுக்கிரன், புதன் மற்றும் சூரியன் ஆகிய 3 கிரகங்களும் ஒரே ராசியில் சஞ்சரிக்கப்போகிறது. ஜோதிடர்களின்படி, 59 ஆண்டுகளுக்குப் பிறகு ஆபூர்வ நிகழ்வு 3 கிரகங்களும் ஒரே ராசியில் சேரப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த விசேஷ நிகழ்வு காரணமாக 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது. 

தனுசு: 

இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் சம்பந்தமாக பயணம் செய்ய நேரிடலாம். இந்த ராசியில் நீச்சபங்கா, ஹன்ஸ், பத்ரா என்ற ராஜயோகங்கள் உருவாகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பல பெரிய விஷயங்கள் கைகூடி வரும். ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்: 

இந்த ராசிக்காரர்களின் தொழில் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பகுதிகளில் முதலீடு செய்ய முடிவு செய்யலாம். இந்த ராசியில் ஹன்ஸ் என்ற ராஜயோகம் காரணமாக திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரிய தொகையைப் பெறலாம். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. படிப்பில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்: 

இந்த ராசியில் நல்ல பலன் தரும் ராஜயோகம் கிடைக்கப்போகிறது. பல நல்ல செய்திகள் கேட்கப்படும். உத்தியோகத்தில் முன்னேற்றத்துடன் சம்பளமும் கூடும். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே, வேறு பல வருமான ஆதாரங்களாகவும் மாற வாய்ப்பு உள்ளது. பணம் சேமிக்கப்படும். புதிய சொத்து, வாகனம் வாங்கலாம்.

ரிஷபம்: 

இந்த ராசிக்காரர்கள் எந்தத் திட்டங்களை தீட்டினாலும் அதில் முழு வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிப்பதுடன், வியாபாரமும் மேம்படும். நீங்கள் கடன் கொடுத்தவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறலாம். நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்கலாம். உங்கள் பிள்ளைகளின் படிப்பில் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.

கன்னி: 

இந்த ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் மங்களகரமானதாக அமையப் போகிறது. இதற்குக் காரணம் கன்னி ராசியில் சுக்கிரன் வலுவிழக்கும் ராஜயோகத்தை உருவாக்குவதுதான். இதனால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் முதலீட்டிற்கு மிகவும் சாதகமாக இருக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் இந்தக் காலகட்டத்தில் முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News