சனியின் அருளால் தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்!

Saturn Transit 2022: சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2022, 11:20 AM IST
  • சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார்.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.
சனியின் அருளால்  தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! title=

Saturn Transit 2022: சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு துவங்கியது. சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார்.இதற்கிடையில், 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். 2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறது.

மேஷம்: மகர ராசியில் சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்கள் வாழ்க்கையில் இனி  வெற்றிகளை அள்ளிக் குவிப்பார்கள். தடைபட்ட அனைத்து வேலைகளும் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், மதிப்பும் கிடைக்கும். 

தனுசு:  சனிபகவான் தனுசு ராசியின் இரண்டாம் வீட்டில் இருப்பார். தனுசு ராசிக்காரர்கள் இதன் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். இதுவரை வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு ஏற்படும். காரணமே இல்லாமல் தடை பட்ட வேலைகள் இப்போது மிக விரைவாக நிறைவேறத் தொடங்கும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்றாக இருக்கும். பெரும் லாபம் ஈட்டுவார்கள். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் குழந்தை தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த நேரத்தில் வெற்றி பெறுவார்கள். 

சனி நீதியின் கடவுள் என்பதால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் மோசமான பலன்களைப் பெற்று வாழ்க்கையில் துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News