சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி எது?

சூரிய பெயர்ச்சி பலன்கள்: 11 மாதங்களுக்குப் பிறகு, சூரிய பகவான் அவரது வீட்டிற்கு வரப்போகிறார். கிரகங்களின் மாற்றங்கள் தனிப்பட்ட ராசி மற்றும் கிரகங்களுக்கு ஏற்ப அவற்றின் பலன்களைத் தருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 10, 2022, 04:25 PM IST
  • மனக் குழப்பத்தைத் தரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
  • சிலர் உங்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்யலாம்.
  • விழிப்புடன் இருப்பதன் மூலம், வரும் பல வகையான பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள்.
சிம்ம ராசியில் நுழையும் சூரியன்; அதிகபட்ச பாதிப்பை சந்திக்கப் போகும் ராசி எது? title=

Sun Transit: கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். ஜோதிடத்தில் சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, அரசு-நிர்வாகம், ஆரோக்கியம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர், எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 11 மாதங்களுக்குப் பிறகு, சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். ஒரு மாதம் இங்கேயே தங்கி இருப்பார். சூரியக் கடவுளை வரவேற்க இளவரசர் புதன் கிரகம் ஏற்கனவே அங்கே இருக்கிறார். விண்வெளியில் நடக்கும் இந்த மாற்றம் சுப மற்றும் அசுப பலன் இரண்டையும் கொண்டுள்ளது. உண்மையில், எந்த மாற்றத்திலும் 100% லாபமோ 100% நஷ்டமோ இல்லை. விண்வெளியில் கிரகங்களின் மாற்றங்கள் தனிப்பட்ட ராசி மற்றும் கிரகங்களுக்கு ஏற்ப அவற்றின் பலன்களைத் தருகின்றன. இந்த மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எப்படி பலன் கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் ஏற்படும். எனவே இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் அமைதியான மனதுடன், சிந்தித்து செயல்பட வேண்டும். கலக்கமோ, கோபமோ கொள்ளாமல், மெதுவாகப் பிரச்சனையைத் தீர்க்க பாடுபடுங்கள். இந்த ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகளை தொடர்ந்து ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

வீட்டில் ஏற்படும் சிறிய விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது

குடும்பத்திலும் அமைதி காக்க வேண்டும், சின்ன சின்ன விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் ஆட்சேபனை இருந்தால், மிகவும் பொறுமையாக மற்றவர் முன் உங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்து சொல்ல வேண்டும். வீட்டில் தகராறுகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. அதன் விளைவாக மகிழ்ச்சி குறையும். பதற்றத்தை அதிகரிக்க முயற்சிக்காதீர்கள். ரியல் எஸ்டேட் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. விழிப்புடன் இருப்பதன் மூலம், வரும் பல வகையான பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள், ஏனெனில் பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கேளுங்கள். அன்புடன் பேசுங்கள், இல்லையெனில் மனைவியின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படலாம்.

அவதூறு ஏற்படலாம்

நீங்கள் எங்காவது பயணம் செய்ய வேண்டியிருந்தால், அது குறித்த தகவல் ஏற்கனவே இருந்தால், பயணத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு முன்பதிவு செய்ய வேண்டும். பயணத்தின் போது உங்கள் மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாதத்தில், உங்களுக்கு மனக் குழப்பத்தைத் தரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். சிலர் உங்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்யலாம். அது அலுவலகமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி, உங்களிடம் தவறான புகார்களை அளித்து உங்களைத் துன்புறுத்தலாம். இந்த சூழ்நிலைகள் நற்பெயரையும் இழக்க வழிவகுக்கும்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News