கன்னி ராசிக்கு போகும் சுக்கிரன்! இந்த ராசியினரின் காதல் விருப்பங்களை நிறைவேற்றுவார்

Venus Transit Predictions For Aries:  இன்னும் இரு நாட்களில் கன்னிக்கு பெயரும் சுக்கிரன் மேஷ ராசிக்காரர்களுக்கு மண வாழ்க்கையையும் மன வாழக்கையையும் அழகாக்குவார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2022, 07:40 AM IST
  • இன்னும் இரு நாட்களில் கன்னிக்கு பெயரும் சுக்கிரன்
  • மேஷ ராசிக்காரர்களுக்கு மண வாழ்க்கையையும் மன வாழக்கையையும் அழகாக்குவார்
  • காதல் விருப்பங்கள் நிறைவேற இந்த ராசியினரின் இன்னும் இரண்டு நாட்கள் பொருத்தால் போதும்
கன்னி ராசிக்கு போகும் சுக்கிரன்! இந்த ராசியினரின் காதல் விருப்பங்களை நிறைவேற்றுவார் title=

சுக்கிரன் பெயர்ச்சி: செப்டம்பர் 24ம் தேதியன்று ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான நாள். புரட்டாசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான அன்று, சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் நுழையவுள்ளது. ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் மற்றும் செழுமை ஆகியவற்றை தரும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் வலுவாக இருந்தால் அவர்கள் ஆடம்பரமாகவும், புகழுடன் பிரபலமான வாழ்க்கை வாழ்வார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமடைந்தால், சகல சுகபோகங்களும் கிட்டும். சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 நாட்கள் தங்கி, அதன் பிறகு வேறொரு ராசியில் நுழைகிறார். செப்டம்பர் 24 சனிக்கிழமையன்று கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வதால் பல ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு பலன்கள் கிடைக்கும்.  

மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் சுக்கிரன் அமைவதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இவர்களின் வேலையில் தடைகள் வரலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவை தவிர மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அமைவதால் அசுப பலன்கள் இருக்காது என்பது பொதுவான பலன் ஆகும்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், உங்க ராசி என்ன?

இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்? அது சுபமானதாக இருக்குமா? அல்லது கஷ்டப்படப் போகின்றார்களா? தெரிந்துக் கொள்வோம்.

வேத ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 2வது மற்றும் ஏழாவது வீடுகளை ஆட்சி செய்து மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, இந்த சுக்கிரப் பெயர்ச்சியின் கணிப்புகளின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு சில மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

சாதகமான நேரத்தை அனுபவிக்கும் வாய்ப்பை மேஷ ராசியினருக்கு கொடுக்கும் இந்த சுக்கிரன் பெயர்ச்சி, தனிப்பட்ட முறையில், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காதலர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும், வாழ்க்கைத் துணை அல்லது காதல் கொண்டவருடனான பிணைப்பை சுக்கிரன் வலுவடையச் செய்வார்.

மேலும் படிக்க | வாழ்க்கையை வளமாக்கும் கிரக தோஷ பரிகாரங்கள்

ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாதவராக இருந்தால், காதலியுடனான பிணைப்பு வலுப்படும், காதலும் இல்லாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு காதல் எண்ணங்கள் மனதில் தோன்றும். மேஷ ராசிக்காரர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு மனதில் உல்லாசத்தைக் கொடுக்கும் பெயர்ச்சியாக சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அமையும்.

திருமணத்திற்கு பெண் தேடுபவர்களுக்கு, அவர்கள் விரும்பியதுபோல வரன் அமையலாம். வயதான தம்பதிகளாக இருந்தால், அவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகமாகும் வாய்ப்பும் உண்டு. அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனமான மற்றும் அழகான ஆக்கப்பூர்வமான எண்ணங்களை இந்த சுக்கிரன் பெயர்ச்சி கொடுக்க இருப்பதால், செப்டம்பர் 24 முதல் காதலுக்கு மரியாதை என்று சொல்வார்கள் மேஷ ராசிக்காரர்கள்.

பொருளாதார ரீதியாகவும், சுக்கிர பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாகவே இருக்கிறார். இருப்பினும், நெருங்கிய உறுப்பினரின் ஆரோக்கியத்திற்காக செலவிட வேண்டியிருக்கும். பணம் செலவாவதைப் பற்றி கவலைப்பட முடியாத கட்டத்தில் இருப்பீர்கள்.குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் ஏற்படும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசித்தவுடன் சுப பலன்களைத் தரத் தொடங்குவார். இதன் மூலம் அவர்களுக்கு மனதில் நிம்மதி பெருகும். 

மேலும் படிக்க | செப்டம்பர் 21 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்கும் விசேஷமான நாள்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News