ஜோதிடத்தில், சனி தேவன் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். நீதிபதியான சனிதேவன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியிலிருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்ப ராசிக்கு சனியின் வருகையால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகும். இதனால் எந்த எந்த ராசிகள் பலன் பெறப்போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சனி
சனிப்பெயர்ச்சியால் வேலையில் தொழிலில் வெற்றிகளை குவித்து, நிதி ரீதியாக வலுப்பெறும் ராசிகள்:
கடகம்:
கடக ராசியின் எட்டாவது வீட்டின் அதிபதி சனி தேவன். ஜனவரி 17-ம் தேதி சனிதேவர் இந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். சனி எட்டாம் வீட்டில் நுழையும் போது விபரீத ராஜயோகம் உருவாகும். இந்த நேரத்தில், கடக ராசிக்காரர்கள் ஒரு பெரிய பதவியைப் பெறலாம். பெயரும் புகழும் அதிகரிக்கும். கடனில் சிக்கிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். இதனால் ஆதாயம் உண்டாகும்
கன்னி:
கன்னி ராசியின் ஆறாம் வீட்டிற்கு அதிபதி சனிபகவான் இந்த வீட்டில் சஞ்சரிப்பார். அதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகும். சனிப்பெயர்ச்சி காலத்தில் நீதிமன்றம், வழக்கு விவகாரங்களில் இருந்து விடுபடலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டாகும். நோயிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் வந்த சேரும்.
மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - புதன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!
தனுசு:
கும்ப ராசியில் சனி நுழைந்தவுடன் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். தனுசு ராசியின் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சனி இந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மீனம்:
மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சனி தேவன் இந்த வீட்டில் நுழைவார். அதன் காரணமாக விபரீத ராஜயோகம் உருவாகும். இந்த ராசிக்காரர்களுக்கு பயணத்த்தினால் லாபம் உண்டாகும். வருமானம் கூடும். நாள்பட்ட நோயிலிருந்து விடுபடலாம். வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | கும்ப ராசியில் நுழையும் சனியினால் ‘3’ ராசிகளுக்கு பண நெருக்கடி ஏற்படும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ