20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள இருக்கிறது. சூப்பர் 12 லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என கூறப்பட்ட பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த அணியும் அதே உற்சாகத்தில் இருக்கும் நிலையில், 20 ஓவர் உலக கோப்பையையும் இரண்டாவது முறையாக தங்கள் வசப்படுத்திவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது.
மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே, 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் துல்லியமான காரணங்களையும் முன்வைத்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பையை இறுதிப்போட்டி குறித்து அனில் கும்பிளே பேசும்போது, " மெல்போர்ன் மைதானம் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இரண்டிற்கும் மிகவும் சாதகமாக இருக்கும். அதேநேரம் மற்ற மைதானங்களை விட அதிகமான வேகத்தில் பந்து பேட்ஸ்மேன்களுக்கு வரும். சரியாக டைமிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் ரன்களை குவிப்பர்.
பாகிஸ்தான் அணியிலும் அந்த வேகத்தில் பந்து வீசுவதற்கு மற்றும் ஸ்விங் செய்வதற்கு பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியை இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் எதிர்கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது தற்போது இங்கிலாந்து அணிக்கு அதிக அட்வான்டேஜ் இருக்கிறது. இங்கிலாந்தின் கை இறுதிப்போட்டியில் ஓங்கி இருக்கும் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இறுதிப் போட்டி இருக்கும். என்னை பொருத்தவரை, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏனெனில் வேகத்திற்கு மார்க் வுட் இருக்கிறார். பந்தை ஸ்விங் செய்வதற்கு கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார். சூழலில் ரஷீத் மற்றும் லிவிங்ஸ்டன் அசத்துகிறார்கள்" என கூறியிருக்கிறார். இவரது கருத்து பாகிஸ்தான் ரசிகர்களை எரிச்சலைய வைத்துள்ளது. அதேநேரத்தில் 20 ஓவர் உலககோப்பை நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை, மெல்போர்ன் மைதானத்தில் 90 விழுக்காடு மழை பெய்யவும் வாய்ப்பிருகிறது. ஒருவேளை அன்றைய நாள் போட்டி ரத்தானால் அடுத்தநாளான திங்கட்கிழமை போட்டி நடைபெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ