ICC T20 World Cup : தோற்றாலும் இவ்வளவு பரிசா? இந்திய அணிக்கான பரிசுத்தொகை விவரம்... இதோ!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், அரையிறுதி சுற்றோடு வெளியேறிய இந்திய அணிக்கான மொத்த பரிசுத்தொகை குறித்த விவரத்தை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 12, 2022, 08:12 AM IST
  • இத்தொடரில் இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளை வென்றது.
  • அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.
  • 4 போட்டிகளை வென்றதற்கும், அரையிறுதிக்கு முன்னேறியதற்கும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
ICC T20 World Cup : தோற்றாலும் இவ்வளவு பரிசா? இந்திய அணிக்கான பரிசுத்தொகை விவரம்... இதோ!  title=

நடப்பு டி20 உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மிகப்பெரும் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் நாளை (நவ. 12) நடைபெறும் இறுதிப்போட்டியில் மோத உள்ளனர். 

கடந்த அக். 16ஆம் தேதி குரூப் சுற்றுப்போட்டிகளுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை திருவிழா, நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அந்தந்த அணிகளுக்கான பரிசுத்தொகைகள் நாளை அறிவிக்கப்படும். 

அதாவது, நாளை போட்டியில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றபோகும் அணிக்கு, 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 13 கோடி) பரிசுத்தொகையாக கொடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும் பரிசின் பாதித்தொகை (சுமார் ரூ. 6.5 கோடி)இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி...? - முழு விவரம்

இந்நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணிக்கான பரிசுத்தொகை குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அரையிறுதியில் மோசமாக விளையாடியிருந்தாலும், சூப்பர் 12 சுற்றில், ஐந்தில், நான்கு போட்டிகளை வென்று அசத்தியிருந்தது. மேலும், இந்த தொடரில் 4 வெற்றிகளை பெற்ற (8 புள்ளிகளை பெற்ற) ஒரே அணி இந்தியாதான். 

உலகக்கோப்பை கைவிட்டு போயிருந்தாலும், இந்திய அணி கைநிறைய பரிசுத்தொகையை இந்த தொடரில் அள்ளியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அரையிறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 3.22 கோடி ) வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது. அதேபோன்று, போட்டிகளில் வெற்றிபெற்றதற்கும் ஐசிசி பரிசுத்தொகையை வழங்குகிறது. 

இதன்படி, இந்தியா சூப்பர் 12 சுற்றில் நான்கு போட்டிகளை வென்றதால், கூடுதலாக ஒரு போட்டிக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 32.54 லட்சம்) என நான்கு போட்டிகளுக்கு சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் (1.28 கோடி ரூபாய்) வழங்கப்படும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 டாலர் = ரூ. 80.85 என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.  

இதன்மூலம், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி,  டி20 உலகக்கோப்பையில் மொத்தம் ரூ. 4.50 கோடியுடன் நாடு திரும்புகிறது. இருப்பினும், இதைவிட கோப்பைதான் வேண்டும் என்றால், அடுத்த டி20 உலகக்கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | T20 World cup: இந்திய அணி படுமோசமாக தோற்கும் என்பதை முன்பே கணித்த பாகிஸ்தான் வீரர்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News