வார்னர் கிளாஸ்.. மேக்ஸ்வெல் சரவெடி.. ஜாம்பா மெர்சல்..! நெதர்லாந்தை பொட்டலம் கட்டிய ஆஸ்திரேலியா

வார்னர் கிளாஸ், மேக்ஸ்வெல் அதிரடியில் ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி பவுலிங்கில் நெதர்லாந்து அணியை வெறும் 90 ரன்களுக்கு சுருட்டியது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 25, 2023, 09:44 PM IST
  • வார்னர் கிளாஸான ஆட்டம்
  • மேக்ஸ்வெல் சரவெடி சதம்
  • ஆஸ்திரேலியா அபார வெற்றி
வார்னர் கிளாஸ்.. மேக்ஸ்வெல் சரவெடி.. ஜாம்பா மெர்சல்..! நெதர்லாந்தை பொட்டலம் கட்டிய ஆஸ்திரேலியா title=

நெதர்லாந்து அணிக்கு எதிராக மிக பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது ஆஸ்திரேலியா. பேட்டிங்கில் கலக்கியதுபோலவே பந்துவீச்சிலும் அனல் பறக்கவிட்டது அந்த அணி. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்துக்குள்ளான ஆஸ்திரேலிய இப்போது பழைய பன்னீர்செல்வமாக வெகுடெழுந்திருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என எல்லா துறைகளிலும் கிளாஸ் காண்பிக்கிறது. 5 முறை சாம்பியன் அணி என்றால் சும்மாவா..!. நாலாபுறமும் எல்லோரும் சீண்டியதால், தங்களின் பழைய ஆட்டத்துக்கு திரும்பியிருக்கின்றனர். அதனால் தான் நெதர்லாந்து அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 399 ரன்கள் குவித்ததுடன், அந்த அணியை வெறும் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியிருக்கின்றனர்.

மேலும் படிக்க | நெதர்லாந்து கொடுத்த லைப்... கப்புனு பிடிச்சு சதம் விளாசிய வார்னர் - அப்செட்டான கேப்டன்!

பேட்டிங்கை பொறுத்தவரை வார்னர் கிளாஸாக ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒருமுறை சதமடித்திருக்கும் அவர், இப்போட்டியில் 93 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், கடந்த சில போட்டிகளில் ஒழுங்காக விளையாடாமல் சொதப்பிய ஸ்டீவ் ஸ்மித் இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதமடித்திருக்கலாம், ஆனால் ஸ்மித்தின் எண்ணம் ஈடேறவில்லை. அவரை விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இருந்த நெதர்லாந்து அணி வீரர்களுக்கு அதன்பிறகு ஒரு புயல் வந்து அடிக்கப்போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த புயல் மேக்ஸ்வெல்லாக டெல்லி மைதானத்தில் மையம் கொண்டது.

எந்த திசையில் நெதர்லாந்து வீரர்கள் பந்துவீசினாலும், அந்த பந்து பவுண்டரி கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தது. வாண வேடிக்கைகளைக் காட்டிக் கொண்டிருந்த மேக்ஸ்வேல் இந்த உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.  வெறும் 44 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட மேக்ஸ்வெல் 106 ரன்கள் குவித்தார். எப்போது இந்த எரிமலை வெடிக்கும் என காத்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று டெல்லி மைதானத்தில் விருந்தாக அமைந்தது. இதில் 9 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். இப்படியொரு ஆட்டத்தை நெதர்லாந்து வீரர்கள் கனவில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய தெம்புடன் தான் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டனர்.

இப்போட்டியில் எப்படியாவது ஆஸ்திரேலியாவையும் அசைத்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு தான் களம் கண்டிருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை மலைக்கு முன்னால் மடுவாக போனது. அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கே உரிய ஆக்ரோஷத்துடன் நெதர்லாந்தை புரட்டி எடுத்துவிட்டனர். பந்துவீச்சில் தான் சோடைபோய்விட்டோம், பேட்டிங்கிலாவது கொஞ்சம் குவாலிட்டி காட்டலாம் என நினைத்ததும் அந்த அணிக்கு பொய்த்துப் போனது. ஆடம் ஜாம்பாவின் சுழலில் சிக்கி நான்கு வீரர்கள் வீழ்ந்துவிட, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினர். இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதே ஆக்ரோஷத்தை தொடர்ந்தால் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்வதை யார் அணைபோட்டாலும் தடுத்து நிறுத்த முடியாது.  

மேலும் படிக்க | World Cup 2023: “உலக கோப்பை போலி டிக்கெட்” கவனமாக இருங்கள்! உங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News