ICC World Cup 2023, AUS vs NED: ஐசிசி நடப்பு உலகக் கோப்பை தொடரின் 24ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி மைதானம் பேட்டிங்கிற்கே அதிகம் சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆப்ஷனை தேர்வு செய்தது.
அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இதில் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வார்னருடன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை வேகமாக சேர்த்தனர். இந்நிலையில், 16 ஓவர்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து ஆஸ்திரேலியா 90 ரன்களை குவித்திருந்தது.
17ஆவது ஓவரை காலின் ஆக்கர்மேன் வீச வந்தார். அப்போது முதல் பந்தில் டேவிட் வார்னர் கவர்ஸ் திசையில் இருந்த மேக்ஸ் ஓ'டவுடிடம் தட்டிவிட்டு ரன் ஓடினார். ஆனால், அவர் பந்தை பிடித்துவிட்டார் என நினைத்து ஸ்மித் ஓடாமல் நின்றுவிட்டு நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்துவிட்டார். வார்னர் அவர் சரியாக பந்தை எடுக்காததை பார்த்து முக்கால்வாசி பிட்சை தாண்டிவிட்டார்.
வீடியோ:
மேலும் படிக்க | தோனி, மெயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் என சிஸ்கேவுக்கு விடைகொடுக்க தயாராகும் மூத்த வீரர்கள்
இருப்பினும், ஸ்மித் ஓடாததால் வார்னரே மீண்டும் ஸ்ட்ரைக்கர் முனைக்கு ஓடினார், ஆனால் அதுவரை மேக்ஸ் பந்தை எடுத்து கீப்பர் எட்வர்ட்ஸிடம் கொடுக்கவில்லை. இதனால், நெதர்லாந்து ஒரு சிறப்பான வாய்ப்பை தவறவிட்டது எனலாம்.
ஏனென்றால், வார்னர் அப்போது 32 ரன்களில்தான் இருந்தார். ஆனால், டேவிட் வார்னர் 39.1 ஓவர் வரை களத்தில் இருந்து, 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்களை குவித்தார். மறுபுறம் ஸ்மித் 71 ரன்களையும், அடுத்து வந்த லபுஷேன் 62 ரன்களையும் குவித்தனர். இதில் வார்னர் ஸ்மித் உடன் 132 ரன்களுக்கும், லபுஷேனுடன் 84 ரன்களுக்கும் பார்ட்னர்ஷிப் வைத்தார்.
அப்போதே வார்னரை ரன் அவுட் செய்திருந்தால் ஸ்மித் - வார்னர் பார்ட்னர்ஷிப் முறிந்திருக்கும். வலது - இடது காம்பினேஷனால் கஷ்டப்பட்ட நெதர்லாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிரமமே இருந்திருக்காது. மேலும், லபுஷேன் உடனும் வார்னர் அத்தகைய பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க மாட்டார். தற்போது ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை எடுத்துள்ளது.
இதுவே, வார்னர் அவுட்டாகியிருந்தால் இன்னும் ரன்கள் குறைந்திருக்கும். மேலும், தற்போது ஆஸ்திரேலியா 350+ ரன்களை இலக்காக நிர்ணயிக்க அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 428 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ