கடைசி பந்தில் காத்திருந்த டிவிஸ்ட்! பெவிலியனுக்கு போன வீரர்களை விளையாட அழைத்த நடுவர்கள்

டி20 உலக கோப்பையில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணிக்கு கடைசி பந்தில் நடுவர்கள் வைத்த டிவிஸ்ட் திகைப்பை ஏற்படுத்தியது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 30, 2022, 01:51 PM IST
  • திரிலிங்காக முடிந்த ஜிம்பாப்வே போட்டி
  • கடைசி பந்தில் வெற்றி பெற்ற வங்கதேசம்
  • அதிர்ஷ்டத்தை தவறவிட்ட ஜிம்பாப்வே அணி
கடைசி பந்தில் காத்திருந்த டிவிஸ்ட்! பெவிலியனுக்கு போன வீரர்களை விளையாட அழைத்த நடுவர்கள் title=

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே - வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் நஜ்முல் ஹூசைன் 55 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்ததாக, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 35 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் பரிதாபமாக இருந்தது. ஆனால் ஷான் வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடி வங்கதேச அணிக்கு அச்சுறுத்தலாக மாறினார். ஜிம்பாப்வே அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்ற அவர், 64 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. 

மேலும் படிக்க | IND vs SA: கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பந்த்! யாருக்கு அணியில் வாய்ப்பு?

3வது பந்தில் லெக்பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைக்க, 4வது பந்தை காரவா சிக்சருக்கு விளாசினார். அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த முசாராபானி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க, வங்கதேச வீரர்கள் வெற்றி களிப்பில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், ரீப்பிளேவில் ஸ்டம்புக்கு முன்பாக பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்யப்பட்டது தெரியவந்ததால், நடுவர்கள் அந்த பந்தை நோபாலாக அறிவித்தனர். பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்த வங்கதேச வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ப்ரீஹிட் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அதிர்ஷ்டம் ஜிம்பாப்வே அணிக்கு வந்தது. அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் வங்கதேச அணி திகைப்பில் வெற்றியைக் கொண்டாடினர்.

மேலும் படிக்க | 2023 ஏலத்தில் ஜடேஜா உட்பட CSK கழட்டிவிடப்போகும் 3 முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News