ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக புதிய பயிற்சியாளர்

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷமண் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 08:29 PM IST
ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக புதிய பயிற்சியாளர் title=

ஆசிய கோப்பை 2022: முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவருமான VVS லக்ஷ்மண் தற்போது 2022 ஆசிய கோப்பைக்காக துபாயில் இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இணைந்துள்ளார். கிரிக்பஸ்ஸில் வெளியான அறிக்கையின்படி, ஜிம்பாப்வேயில் நடந்த இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பயிற்சியாளராக பணியாற்றிய லக்ஷ்மண், ஹராரேயில் இருந்து திரும்பி துபாய்க்கு புறப்பட்டார்.

பிசிசிஐ அனுப்பிய வீரர்

ஆசிய கோப்பையில் அணியில் இடம் பெறாத ஜிம்பாப்வே தொடரின் மற்ற வீரர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பயணம் செய்ய முடியாது. இதனால் இந்த தொடரில் 47 வயதான லக்ஷ்மன் தற்காலிகப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 இந்திய அணி சாம்பியனாகுமா? 

ஆசியக் கோப்பைக்கான பயிற்சியாளராக லக்ஷ்மனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், 'பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் டிராவிட் உள்ளார். லேசான கொரோனா அறிகுறிகளைக் கொண்டுள்ளார். அவரது நெகட்டிவ் ரிப்போர்ட் வந்தவுடன் அவர் அணியில் இணைவார்" எனத் தெரிவித்துள்ளது. 

முதல் போட்டியில் பாகிஸ்தான்

27 ஆம் தேதி ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. அடுத்த இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்வதை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்

மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News