லபுஷேனை அவுட்டாக்கிய அஸ்வினின் அதிசய பந்து... ரிவர்ஸ் கேரம் பால் என்றால் என்ன?

Ashwin Reverse Carrom Ball: கடந்த போட்டியில் லபுஷேனை ஆட்டமிழக்கச் செய்த அஸ்வினின் ரிவர்ஸ் கேரம் பால் என்றால் என்ன, அதனை அவர் எப்படி வீசினார் என்பது குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2023, 05:10 PM IST
  • அக்சர் படேல் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • இதனால், அஸ்வின் உலகக் கோப்பையில் இடம்பெற வாய்ப்பு.
  • அஸ்வின் வீசிய ரிவர்ஸ் கேரம் பால் பலரையும் வியப்பை ஏற்படுத்தியது.
லபுஷேனை அவுட்டாக்கிய அஸ்வினின் அதிசய பந்து... ரிவர்ஸ் கேரம் பால் என்றால் என்ன? title=

Ashwin Reverse Carrom Ball: உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அக்சர் படேல் மட்டுமே தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் உடற்தகுதியை நீருபிக்காத நிலையில், உலகக் கோப்பையில் அவருக்கு பதில் வேறு ஒரு வீரர் செப்.28ஆம் தேதிக்குள் சேர்க்கப்பட வேண்டும். அதில் அஸ்வினுக்கு தான் அதிக வாய்ப்பிருக்கிறது.  

தற்போது இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு பிரிவிலும் முரட்டு ஃபார்மில் உள்ளது. ரோஹித், கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் பேட்டிங் வரிசை வலிமையாக காணப்படுகிறது. அதேபோல், பந்துவீச்சிலும் குல்தீப், ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் மிரட்டுகின்றனர். ஆல்-ரவுண்டர் பிரிவிலும் ஹர்திக், ஜடேஜாவும் உறுதுணையாக நிற்கின்றனர். பிளேயிங் லெவனில் எட்டாவது இடம் மட்டும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. 

ஷர்துல் தாக்கூர் (அ) அக்சர் படேல் ஆகியோர் தான் எட்டவாது இடத்திற்கான ஆப்ஷனாக இருந்தனர். முன்னர் சொன்னதுபோல் அக்சர் படலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சு பெரிதாக இந்திய அணிக்கு கைக்கொடுக்காத நிலையில், வேறு ஒறு ஆப்ஷனை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில், அஸ்வின் சிறந்த தேர்வு என அனைவரும் கருதுகின்றனர். 

ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது அஸ்வினை அணியில் சேர்ப்பதற்கான முதன்மை காரணம் என்றாலும், அஸ்வினிடம் உள்ள ஏராளமான வெரியேஷன்கள் தான் அவரை எடுப்பதற்கான அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் லபுஷேனை ஆட்டமிழக்கச் செய்த அந்த பந்து என்பது அஸ்வினின் திறனை சொல்ல ஒரு உதாரணமாகும்.

மேலும் படிக்க | விராட் கோலி இல்லை... இந்த வீரர் தான் உலகக் கோப்பையின் ரன் மெஷின் - மூத்த வீரர் கணிப்பு

அஸ்வின் வீசிய ரிவர்ஸ் கேரம் பந்தில் லபுஷேன் ஆட்டமிழந்தார். குறிப்பாக, அஸ்வின், லபுஷேன் மற்றும் வார்னருக்கு ஆட்டமிழக்கச் செய்த பந்து ரிவர்ஸ் கேரம் பந்தாகும். ரிவர்ஸ் ஸ்விங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெகு சிலரே ரிவர்ஸ் கேரம் பால் பற்றி கேள்விப்பட்டு படித்திருப்பார்கள். ரிவர்ஸ் கேரம் பந்து என்றால் என்ன, அதில் அஷ்வின் எப்படி தேர்ச்சி பெற்றார் என்பதை இதில் காணலாம்.

கேரம் பந்து என்றால் என்ன?

ரிவர்ஸ் கேரம் பால் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், கேரம் பால் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். கேரம் பந்தை வீச, பந்து வீச்சாளர் வழக்கத்திற்கு மாறான முறையில் கையில் பந்தை வைத்திருப்பார். பந்து வீசும் கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகியவற்றுக்கு இடையே பந்து வைக்கப்படுகிறது. 

பந்து வீச்சாளர் இந்த ஆக்சனில் பந்தை வெளியிடும் போது, அவர் ஆஃப் ஸ்பின்னை அடைய கட்டைவிரலையும் நடுவிரலையும் அசைக்கிறார். கேரம் விளையாடும்போது ஸ்ட்ரைக்கர் காய்னை பயன்படுத்தப்படுவது போல. இருப்பினும், கேரம் ஸ்ட்ரைக்கரை விட கிரிக்கெட் பந்து அதிக எடை கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், நடுத்தர விரலைப் பயன்படுத்தி பந்து வீசுவது மிகவும் கடினம். கேரம் பந்தைக் கட்டுப்படுத்த அஸ்வின் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

ரிவர்ஸ் கேரம் பால்

உண்மையில், ரிவர்ஸ் கேரம் பந்தானது பாரம்பரிய சுழலில் இருந்து, வேறுபட்ட பேக் ஸ்பின்னை கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரின் இன்ஸ்விங் போலவே, இந்த பந்து வேகமாக உள்நோக்கி வருகிறது. ரிவர்ஸ் கேரம் பந்தை அதிகம் பயன்படுத்தும் அஸ்வின் அல்லது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் திக்ஷனா, பந்தை நேராக வைத்திருப்பதற்காக சீமுக்கு கீழே விரலை வைத்து பந்தை தள்ளுகிறார்கள். இது பந்தில் கூடுதல் சறுக்கல் (வேகத்தை) உருவாக்குகிறது, இது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் பந்தை வேகமாக வெளியே கொண்டு வர உதவுகிறது.

ஒரு ஸ்விங் பவுலர் போல. இந்த வேகத்தால் பேட்டர் ஆட்டமிழந்துவிடுவார்கள். அதை மேலும் ஆபத்தானதாக மாற்றும் வகையில், அஸ்வின் இந்த பந்தை வீசும் போதெல்லாம், அவரும் தனது ரன்அப்பை மாற்றுகிறார். லபுஷேனுக்கு எதிராகவும் அவர் அதையே செய்தார். இது அது பந்தை வைத்திருக்கும் மணிக்கட்டுகளை மறைக்க உதவுகிறது. ரிவர்ஸ் கேரம் மீதான கட்டுப்பாட்டை அஷ்வின் பெற கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆனது என்கிறார்.

மேலும் படிக்க | விலகிய முக்கிய வீரர்... ஆனால் இது இந்தியாவுக்கு நல்லது தான் - எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News