தோனி தலைமையிலான CSK அணி 4-வது IPL கோப்பையை வெல்லுமா?

2020 IPL தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன..!

Last Updated : Sep 16, 2020, 02:33 PM IST
தோனி தலைமையிலான CSK அணி 4-வது IPL கோப்பையை வெல்லுமா? title=

2020 IPL தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன..!

வரும் செப்டம்பர் 19 அன்று அபுதாபியில் நடைபெறும் IPL 2020 முதல் ஆட்டத்திலேயே CSK - மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இந்த தொடரில் பங்கேற்றுள்ள CSK அணியின் கேப்டன் MS.தோனி, இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றி, 4-வது டைட்டிலை வெற்றி கொள்வாரா என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

IPL 2020 தொடரில் பங்கேற்கும்வகையில் கடந்த 21 ஆம் தேதி UAE சென்ற CSK அணி வீரர்கள் தனிமப்படுத்துதலில் ஈடுபட்டு வரும் நிலையில் அணியின் வீரர்கள் தீபக் சஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருக்கின்றனர். இதனால், அணியின் பயிற்சி போட்டிகள் கேள்விக்குறியானது. UAE கிளம்புவதற்க்கு முன் சென்னை சிதம்பரம் மைதானத்தில் அணி வீரர்கள் பயிற்சி போட்டியில் கலந்து கொண்டதே இதற்கு காரணம் என்று ஒரு புறம் கூறிவருகின்றனர். இருப்பினும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு எடுக்கப்பட்ட தொடர் கொரோனா பரிசோதனைகளில் அவர்களுக்கு நெகட்டிவ் வந்ததையடுத்து பயிற்சி போட்டிகள் துவங்கின.

மற்ற அணிகளை விட தாமதமாக பயிற்சி போட்டியை துவங்கியதை அடுத்து, இரவு பகல் பாராமல் அணி வீரர்கள் தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். CSK அணி இதுவரை 3 IPL டைட்டிலை வென்றுள்ள நிலையில், இந்த முறை 4-வது டைட்டிலை வெற்றி கொள்ளுமா என்று CSK ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர். கடந்த மாதம் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் இந்த IPL தொடரை எதிர்கொள்ள முடியும் என்பதால் கோப்பையை அவர் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

AlSO READ | IPL 2020: MI அணியில் சேர்ந்துவிட்டாரா Sachin-ன் மகன் Arjun Tendulkar?

முன்பு IPL தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற நெருக்கடி தோனிக்கு இருந்தது. எனவே, இதற்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், அவர் IPL போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி மற்றும் தன்னுடைய அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்தி போட்டியை எதிர்கொள்ள முடியும்.

இருபினும் CSK அணியின் முக்கிய வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதுமட்டும் இன்றி CSK அணியில் மூத்த வீரர்கள் அதிகமாக உள்ளனர். இதையெல்லாம் எதிர்கொண்டு தோனி, அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை நோக்கிய பயணத்தை மேற்கொள்வாரா என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு. 

IPL2020 போட்டியில் விளையாடவுள்ள CSK அணியின் மூத்த வீரர்கள்: 

தோனி - 38 வயது
வாட்சன் - 38 வயது
டு பிளெசிஸ் - 35 வயது
டுவைன் பிராவோ - 36 வயது
இம்ரான் தாஹிர் - 40
அம்பட்டி ராயுடு - 34
கெதர் ஜாதவ் - 34

சீனியர் சிட்டிசன்களைக் கொண்ட அணி என்று பலர் கேலி, விமர்சனங்கள் செய்தாலும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளதே சிஎஸ்கேவுக்குப் பல சமயங்களில் கைகொடுத்துள்ளது. அதனால்தான் கடந்த இரு வருடங்களிலும் அதன் பேர், புகழ், சாதிக்கும் முனைப்பு போன்றவை துளியும் குறையவில்லை. இளைஞர்களைக் கொண்டு மட்டுமல்ல 33 வயதைக் கடந்த வீரர்களைக் கொண்டும் தோனியால் சாதிக்க முடியும் என்பது தான் உண்மை. 

ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க: 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News