இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவிடம் ZEE NEWS ஒரு பெரிய ஸ்டிங் ஆபரேஷன் செய்தது. இந்திய அணியில் ஃபிட்னஸை போலியாக நிரூபிக்க ஊக்கமருந்து ஊசி பயன்படுத்தப்பட்டது; சவுரவ் கங்குலி - விராட் கோலிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம்; அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டார்.
கூடுதலாக, பும்ராவின் உடற்தகுதி குறித்தும், மூத்த வீரர்கள் அணியில் நீடிக்க அவர்கள் கையாளும் சூட்சமங்கள் குறித்தும் அவர் பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அணி வீரர்களுடனான தனது தனிப்பட்ட உறவு குறித்தும் சேத்தன் சர்மா பேசியுள்ளார்.
அதுகுறித்து, உளவு கேமாராவில் பதிவானது,"டி20 போட்டியில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வலுவான தொடக்க வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்லுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினோம். நீண்ட காலத்திற்கு ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக பொறுப்பேற்பார். ரோஹித் சர்மா இனி, டி20 அணியில் இருக்க மாட்டார். சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சுப்மான் கில் உள்ளிட்ட 15-20 வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்துள்ளேன்.
Zee News पर सबसे बड़ा खुलासा, खुफिया कैमरे पर खुले BCCI के राज #GameOver @preetiddahiya @DChaurasia2312 pic.twitter.com/D3Mf3YdC6x
— Zee News (@ZeeNews) February 14, 2023
ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற இந்திய வீரர்கள் என் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் எனது வீட்டிற்கு கூட அவர்கள் வந்துள்ளனர். மற்ற அனைவரையும் விட ஹர்திக் பாண்டியாதான் அடிக்கடி வீட்டிற்கு வருவார்" என்றார். மேலும், தொடர்ந்து சீராக இடைவெளியை எடுத்துக்கொண்டு, சில மூத்த வீரர்கள் அணியில் தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றும் சேத்தன் சர்மா கூறினார்.
சேத்தன் சர்மாவின் இந்த தகவல்கள் அனைத்தும் பிசிசிஐ மட்டுமின்றி, ஐசிசியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கிரிக்கெட் உலகையே அசைத்து பார்க்கும் வகையில், வெளியாகியுள்ள இந்த தகவல்கள், டிவி வரலாற்றில் இது மிகப்பெரிய திருப்புமுனையாகும். மேலும் இதுபோன்ற உண்மைகள் பிசிசிஐ மூலம் அம்பலப்படுவது இதுவே முதல் முறை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ