சென்னை தொழிலதிபரிடம் 4 கோடி ரூபாய் ஏமாந்த Harbhajan Singh: வழக்கு பதிவு!!

ஹர்பஜன் சிங் வழக்கு பதிவு செய்ததையடுத்து, அவர் 4 கோடி ரூபாய் கொடுத்த தொழிலதிபர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் கோரியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 09:29 PM IST
  • ஹர்பஜன் சிங் சென்னை நகர போலீசாரிடம், தன்னிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டில் ஜி மகேஷ் என்ற தொழிலதிபருக்கு ஹர்பஜன் ஒரு தொகையை கடனாகக் கொடுத்தார்.
  • மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் கோரியுள்ள ஜாமீன் மனு தற்போது தற்போது நிலுவையில் உள்ளது.
சென்னை தொழிலதிபரிடம் 4 கோடி ரூபாய் ஏமாந்த Harbhajan Singh: வழக்கு பதிவு!! title=

மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) சமீபத்திய நாட்களில் பலதரப்பட்ட விஷயங்களுக்காக செய்திகளில் வந்த வண்ணம் உள்ளார். 'தனிப்பட்ட காரணங்களால்' வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020) சீசனில் இருந்து விலக முடிவு செய்த பின்னர், ஹர்பஜன் சிங் சென்னை நகர போலீசாரிடம் (Chennai City Police), தன்னிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் வழக்கு பதிவு செய்ததையடுத்து, அவர் 4 கோடி ரூபாய் கொடுத்த தொழிலதிபர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை (Madras High Court) அணுகி முன் ஜாமீன் கோரியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் படி, அவர் ஒரு பொதுவான நண்பர் மூலம் அந்த தொழிலதிபரை சந்தித்தார். 2015 ஆம் ஆண்டில் ஜி மகேஷ் என்ற தொழிலதிபருக்கு ஹர்பஜன் அந்த தொகையை கடனாகக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, பஜ்ஜி மகேஷை, கடனைத் திருப்பித் தர பலமுறை அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் மகேஷ் பணத்தை திருப்பித் தர தாமதப்படுத்தினார்.

கடந்த மாதம், மகேஷ் ஹர்பஜன் சிங்குக்கு 25 லட்சம் காசோலையை வழங்கினார். ஆனால், இது போதுமான நிதி இல்லாததால் பௌன்ஸ் ஆனது.  சமீபத்தில் சென்னைக்குச் சென்ற ஹர்பஜன், இந்த வழக்கில் முறையாக போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார்.

ALSO READ: IPL 2020: CSK வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!! காரணம் என்ன?

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த, ஹர்பஜன் சிங்கின் மனு, நீலாங்கரை உதவி போலீஸ் கமிஷனர் விஸ்வேஸ்வரயாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏ.சி.பி. ஏற்கனவே மகேஷை விசாரணைக்கு அழைத்துள்ளார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் கோரியுள்ள ஜாமீன் மனு தற்போது தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், தாலம்பூரில் ஒரு அசையாச் சொத்தை பணயமாக வைத்தே ஹர்பஜனிடமிருந்து கடன் வாங்கியதாக மகேஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, அனைத்து பாக்கிகளும் ஏற்கனவே ஹர்பஜன் சிங்குக்கு செலுத்தப்பட்டுள்ளன.

அதிக கிரிக்கெட் சாத்தியமில்லாத இந்த COVID-19 காலங்களில், ஹர்பஜன் ஏற்கனவே IPL சீசன் 13 இலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இந்த நடவடிக்கையால், CSK அவருக்கு விலையாக அளித்த 2 கோடி ரூபாயையும் அவர் இழக்க வேண்டியிருக்கும். உலகம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த காலங்களில், சட்டத்தின் மூலம், தான் மகேஷுக்கு கடனாகக் கொடுத்த பணத்தை மீட்டெடுக்க முடியும் என ஹர்பஜன் சிங் நம்புகிறார். 

ALSO READ: ‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை: ஹர்பஜன் சிங் பதிலடி

Trending News