இந்திய வீரர்களை திடீர் விசிட் அடித்த தோனி! வைரலாகும் புகைப்படம்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி, இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 09:20 AM IST
  • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்தியா.
  • 2 - 0 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
  • முன்னதாக 5வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.
இந்திய வீரர்களை திடீர் விசிட் அடித்த தோனி! வைரலாகும் புகைப்படம்! title=

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி, தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை வென்று, சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.  இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இரண்டாவது டி20 போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி எட்ஜ்பாஸ்டனில் உள்ள இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்றார், அங்கு இந்திய வீரர்களுடன் உரையாடினார்.  

 

மேலும் படிக்க | இது தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு: முன்னாள் வீரர் கருத்தால் எழுந்த சர்ச்சை!

இந்திய டிரஸ்ஸிங் ரூமுக்கு தோனி சென்ற புகைப்படங்களை பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது.  தற்போது இந்த படங்கள் வைரலாகி வருகிறது.  " Always all ears when the great msdhoni  talks!" என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தது. இந்த வார தொடக்கத்தில், தோனி ரஃபேல் நடால் மற்றும் டெய்லர் ஃபிரிட்ஸ் இடையேயான காலிறுதிப் போட்டியைக் காண விம்பிள்டனுக்குச் சென்றிருந்தார்.  மேலும் இங்கிலாந்தில் தோனி தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் வைரலானது.

 

இரண்டாவது டி20 போட்டியில் விக்கெட் கீப்பர் பந்த் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.  49 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடிய இந்திய அணி அடுத்த 50 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.  இருப்பினும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்ததன் காரணமாக, 20 ஓவர்களில் 170/8 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 31 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் ரிச்சர்ட் க்ளீசன், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரின் விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணியை 121 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்திய அணி.

மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலியை கழட்டிவிட பிசிசிஐ முடிவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News