CSK ரசிகர்களுக்கு குட்நியூஸ் – அணிக்கு திரும்பிய ஸ்டார் பிளேயர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர் ஐபிஎல் விளையாடுவது சந்தேகம் என கூறப்பட்ட நிலையில், அணிக்கு திரும்பியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 22, 2022, 09:13 PM IST
  • 5வது பட்டத்தை வெல்ல தோனி முனைப்பு
  • கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி
  • வெற்றியுடன் விடைபெறுவாரா? என எதிர்பார்ப்பு
CSK ரசிகர்களுக்கு குட்நியூஸ் – அணிக்கு திரும்பிய ஸ்டார் பிளேயர்  title=

ஐபிஎல் 2022 லீக் போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது வியூகத்தை தயார் செய்துள்ளன. ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக இருக்கும் சிஎஸ்கே அணி, இந்த ஆண்டின் தொடக்க போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது. இதற்காக தோனி தலைமையிலான வீரர்கள் சூரத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று மும்பை திரும்பினர்.

புதிய ஓபனிங் பேட்ஸ்மேன்

ஐபிஎல் 2021 சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணியில் பாஃப் டு பிளெசிஸ் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் முக்கிய பங்கு வகித்தனர். இருவரும் சிஎஸ்கேக்காக பல மேட்ச் வின்னிங்ஸ் ஆட்டத்தை  விளையாடினர். ஆனால் இந்த ஆண்டு டூபிளசிஸூக்கு பதிலாக டேவோன் கான்வே சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேன் என்பதால், இவர் மீது சென்னை அணி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

மேலும் படிக்க | ஏலம் எடுக்கப்படாமல் ஐபிஎல் விளையாடும் 3 வீரர்கள்

ரூதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து அசத்தி வருவதால், இந்திய அணிக்கான வாய்ப்பும் அவருக்கு தேடி வந்தது. ஐபிஎல் 2021 இல், அவர் 16 போட்டிகளில் 636 ரன்கள் எடுத்தார், இதில் ஒரு சதமும் அடங்கும். கடந்த முறை டூபிளசிஸூடன் களமிறங்கிய ரூதுராஜ் இந்தமுறை கான்வேவுடன் களமிறங்க உள்ளார்.

தோனியின் ஆயுதம்

நியூசிலாந்து வீரர் கான்வே, அதிரடி மன்னன் என்பதால் அவரை பொறி வைத்து ஏலத்தில் எடுத்தார் தோனி. நியூசிலாந்து அணிக்காக 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே, 602 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சம் 99 ரன்கள் விளாசியுள்ளார். இவர், தோனியின் கேப்டன்சியின் கீழ் இன்னும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5வது பட்டத்தை குறிவைக்கும் சென்னை

தோனிக்கு ஏறத்தாழ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடைசி போட்டியாக இருக்கும். இதனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப சென்னை அணி திட்டமிட்டுள்ளது. அதற்காக அனைவரும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியை பொறுத்தவரை அதிகமாக ஆல்ரவுண்டர்களையே பயன்படுத்துவார். இந்தமுறையும் அந்தமாதிரியான அணியுடன் களமிறங்கி சாதிக்க காத்திருக்கிறார். தோனி வெற்றியுடன் விடை பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

மேலும் படிக்க | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல்லுக்கு வரும் அதிரடி வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News