இனி உலக கோப்பை போட்டிகள் Hotstar-ல் ஒளிபரப்பு இல்லை?

டிஸ்னி ஸ்டார் செவ்வாயன்று ஜீ உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  இதன் மூலம் 2024-2027-ம் ஆண்டிற்கான அனைத்து ஐசிசி போட்டிகளையும் ஜீ ஒளிபரப்பும்.   

Written by - RK Spark | Last Updated : Aug 31, 2022, 01:24 PM IST
  • ஐசிசி உரிமைகளை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்.
  • ஜீ நிறுவனத்துடன் இணைந்து ஒளிபரப்ப உள்ளது.
  • 2023-27 ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இனி உலக கோப்பை போட்டிகள் Hotstar-ல் ஒளிபரப்பு இல்லை? title=

ஐசிசி நிகழ்வுகளுக்கான டிஜிட்டல் உரிமைகள் டிஸ்னி ஸ்டாரிடம் இருந்தது. இதனை தக்கவைத்து கொள்வதற்காக கடந்த வாரம் இந்திய சந்தைக்கான உரிமைகளைப் பெறுவதற்காக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து வாங்கியுள்ளது.  2024 மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட ஐசிசி ஆடவர் நிகழ்வுகளை டிஜிட்டலில் ஜீயுடன் இணைந்து ஹாட்ஸ்டார் ஒளிபரப் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு ஊடக நிறுவனங்களும் நிதிச் சுமையை பகிர்ந்துகொள்ளும்.

"இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் இது முதல்-வகையான கூட்டாண்மை ஆகும், மேலும் டிஸ்னி ஸ்டார் உடனான இந்த தொடர்பு விளையாட்டு வணிக இந்தியாவிற்கான எங்கள் கூர்மையான, மூலோபாய பார்வையை பிரதிபலிக்கிறது. 2027 ஆம் ஆண்டு வரை ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் நிகழ்வுகளை பார்க்க, ZEE தன் நெட்வொர்க்கின் வலிமையைப் பயன்படுத்தி அதன் பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவத்தையும் அதன் விளம்பரதாரர்களுக்கு முதலீட்டில் பெரும் வருமானத்தையும் வழங்கும்" என்று Zee MD மற்றும் CEO புனித் கோயங்கா அறிக்கையில் கூறினார். 

zee

மேலும் படிக்க | INDvsHK இன்றைய போட்டியில் இந்தியாவிற்கு டப் கொடுக்கப்போகும் ஹாங்காங் வீரர்!

டிஸ்னி ஸ்டார் தலைவர் கே. மாதவன் கூறியதாவது: 2023-27 ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற்று, இப்போது 2024-27க்கான ஐசிசி போட்டிகளுக்கான டிஜிட்டல் உரிமைகளை மட்டுமே தக்கவைத்துக்கொள்வதன் மூலம், எங்கள் பார்வையாளர்களுக்கு சமநிலையான மற்றும் வலுவான கிரிக்கெட் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். பல ஆண்டுகளாக, டிஸ்னி ஸ்டார் இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டின் ஈர்ப்பை வலுப்படுத்தியுள்ளது, இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பல்வேறு வயதினரையும், கலாச்சார மக்கள் தொகையையும் சென்றடைய உதவுகிறது. இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமாக, எங்கள் வலுவான போர்ட்ஃபோலியோவுடன் நாங்கள் அதைத் தொடருவோம் என்று கூறினார்.

Viacom 18, Sony Sports மற்றும் Zee ஆகியோரின் வலுவான சவாலைத் தடுத்த டிஸ்னி ஸ்டார் கடந்த வாரம் ஏலத்தை வென்றது.  இது முந்தைய சுழற்சியில் இருந்து உரிமைக் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்தது, இது கிரிக்கெட்டின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியையும் வரம்பையும் தொடர்கிறது என்று ஐசிசி கூறியது.  ஜூன் மாதம் தொடங்கிய இந்த டெண்டர், ஏலம் மற்றும் மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் படிக்க | எனது அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் இல்லை - கம்பீரின் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News