IND vs Aus: நான்காவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சந்தேகம், Brisbane-ல் மீண்டும் லாக்டௌன்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட கிரிக்கெட் அதிகாரிகள், பிரிஸ்பேனில் பேச்சுவார்த்தை நடத்திய 24 மணி நேரத்திற்குள் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2021, 06:00 PM IST
  • இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில் சிக்கல்.
  • பிரிஸ்பேனில் 3 நாள் லாக்டௌன் விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த போட்டியை சிட்னியில் நடத்த ஆஸ்திரேலியா முடிவு செய்யக்கூடும்.
IND vs Aus: நான்காவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சந்தேகம், Brisbane-ல் மீண்டும் லாக்டௌன்!! title=

சிட்னி: பிரிஸ்பேனில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. ஆனால் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரில் 3 நாட்களுக்கு புதிய லாக்டௌன் விதிக்கப்பட்டுள்ளதால், பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட கிரிக்கெட் அதிகாரிகள், பிரிஸ்பேனில் (Brisbane) பேச்சுவார்த்தை நடத்திய 24 மணி நேரத்திற்குள் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணையின்படி, நான்காவது டெஸ்ட் ஜனவரி 15 முதல் காபாவில் நடைபெற உள்ளது.

அடுத்த வாரம் தொடங்கும் காபாவில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மீது 3 நாள் லாக்டௌன் (Lockdown) காரணமாக ஏற்படக்கூடும் தாக்கத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரிகள் மதிப்பிட முயற்சிக்கின்றனர். இந்தியாவின் கடுமையான உயிர் பாதுகாப்பு விதிகள் காரணமாக, பிரிஸ்பேனில் விளையாட ஏற்கனவே தயக்கம் இருந்தது. இப்போது இந்த லாக்டௌனும் இதில் சேர்ந்துகொண்டதால் இந்த போட்டி நடக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒரு ஊழியரின் COVID-19 தொற்று மற்றும் பிரிட்டனில் காணப்படும் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக, பார்டர்-கவாஸ்கர் டிராபியை காபாவில் நிறைவு செய்வதற்கான, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் எண்ணம் பின்னடைவை சந்தித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கனவே 36000 பார்வையாளர்களை கலந்துகொள்ள அனுமதித்திருந்தது. ஆனால் இது மாற்றப்பட்ட சூழ்நிலையில் மாறக்கூடும்.

ALSO READ: மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் Sourav Ganguly: ரசிகர்கள் மகிழ்ச்சி

கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளிலிருந்து விலக்கு பெற BCCI  வியாழக்கிழமை பிரிஸ்பேனில் உள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு கடிதம் எழுதியது. சுற்றுப்பயணத்தின் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டபடி இந்திய அணி (Team India) கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்றியது என்பதையும் BCCI அதன் கவனத்திற்கு கொண்டு வந்தது. பிரிஸ்பேனில் உள்ள விதிகளின்படி, வீரர்கள் அந்தந்த நாளின் விளையாட்டுக்குப் பிறகு தங்கள் ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே இருக்க வேண்டி இருக்கும்.

குயின்ஸ்லாந்து அரசாங்கத்துடன் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளது. அதன்படி வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் ஹோட்டலுக்குள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியும். ஆனால் BCCI எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை விரும்புகிறது என்று அறியப்படுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறவில்லை என்றால், இந்த போட்டியை சிட்னியில் நடத்த ஆஸ்திரேலியா முடிவு செய்யக்கூடும்.  

ALSO READ: ‘நடராஜனின் அற்புத கதை உத்வேகம் அளிக்கிறது’: T Natarajan-ஐ பாராட்டிய முன்னாள் கிரிக்கெட்டர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News