இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளனர். தற்போது துலீப் டிராபியில் விளையாட உள்ளனர். இது வரக்கூடிய டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிதும் உதவும். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டும் வரும் தமிழக வீரர் மற்றும் ஆல்-ரவுண்டர் சாய் கிஷோர் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சாய் கிஷோர் 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அதன் பிறகு ரஞ்சி டிராபியில் தமிழக அணியை சிறப்பாக வழிநடத்தி அரையிறுதிக்கு அழைத்து சென்றார். மேலும் அந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
மேலும் படிக்க | வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர் இடம் பெற மாட்டார்!
ரஞ்சி டிராபியில் அரையிறுதியில் மும்பையிடம் தமிழக அணி தோல்வி அடைந்தது. சாய் கிஷோர் அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். சமீபத்தில் பேசியுள்ள சாய் கிஷோர், தற்போது ரெட்-பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாகவும், இந்திய மற்றும் சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் விளையாட விரும்புவதாகவும், அவருடன் களத்தில் செலவிடும் நேரம் நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். “இந்தியாவில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன். என்னை டெஸ்ட் போட்டியில் எடுங்கள், நான் விளையாட தயாராக இருக்கிறேன். நிறைய இடங்களில் நான் கவனிக்கப்படாமல் இருக்கிறேன். ஜடேஜா போன்ற ஒரு வீரருடன் நானும் விளையாட விரும்புகிறேன்.
நான் அவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இருக்கிறேன். ஆனால் ரெட்-பால் வடிவத்தில் அவருடன் ஒன்றாக விளையாடியதில்லை. எனவே, களத்தில் அவர் என்ன மேஜிக் செய்கிறார் என்பதை நேரடியாக பார்க்க நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும். நான் சிறந்த பவுலர் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, முன்பை விட நான் தயாராக இருக்கிறேன்" என்று சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்திய அணி அடுத்தபடியாக செப்டம்பர் 19 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறுவது இந்தியாவின் அடுத்த பெரிய வேலை இருக்கும். இதற்கான அணியை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.
சாய் கிஷோர் சிறந்த பவுலர் என்றாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் வேளையில் அவருக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி இருந்தார். மொத்தம் அவர் விளையாடிய நான்கு ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், ஜடேஜாவிற்கு தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் பங்களாதேஷ் தொடரில் ஓய்வு எடுத்து கொண்டால் சாய் கிஷோர் ஆல்-ரவுண்டராக அணியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஆர் அஷ்வின் போன்ற மூத்த வீரர்களுடன் விளையாடுவது பலருக்கும் ஒரு கனவாக உள்ளது.
மேலும் படிக்க | துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லை - ரிங்கு சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ