ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனி...? இந்த 3 அணிகள் விடவே விடாது... பல கோடிகள் கொடுத்து முட்டிமோதும்

IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி (MS Dhoni) விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Aug 15, 2024, 12:24 PM IST

இதுவரை அதிக ஐபிஎல் போட்டிகளை விளையாடிய வீரர், எம்எஸ் தோனி. இவர் இந்தாண்டும் நிச்சயம் விளையாடுவார் என கூறப்படுகிறது. 

 

 

1 /8

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, இன்றோடு (ஆக. 15) 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சர்வதேச போட்டியில் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடிகிறார்.   

2 /8

சர்வதேச அளவில் ஓய்வுபெற்ற பின்னரும் ஐபிஎல் தொடரில் 2021, 2023 ஆகிய இரண்டு சீசன்களில் அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி சாம்பியன் பட்டம் வென்றது.   

3 /8

2024ஆம் ஆண்டு சீசன் அவரது கடைசி தொடராக இருக்கும் கூறப்பட்டது. அவரும் அவரது பழைய நீண்ட ஹேர்ஸ்டைலில் 2024 சீசனை விளையாடியிருந்தார்.   

4 /8

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடரில் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியதால் தோனி நிச்சயம் மற்றொரு சீசனில் விளையாடுவார் என கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியும் சர்வதேச அளவில் ஓய்வுபெற்று 3 வருடங்கள் தாண்டிய வீரர்களை Uncapped Player ஆக கருதும் விதிமுறையை மீண்டும் கொண்டுவரும்படி கேட்டுள்ளது. இதன்மூலம் தோனி மற்றொரு சீசன் விளையாடுவார் என்பது உறுதியாகிறது.   

5 /8

ஒருவேளை தோனியை சிஎஸ்கே தக்கவைக்க இயலாமல், விடுவித்துவிட்டால் (இது நடக்க 100% வாய்ப்பில்லை என்றாலும்...) அவரை மெகா ஏலத்தில் எடுக்க எந்தெந்த அணிகள் அதிக ஆர்வம் காட்டும் என்பதை இங்கு காணலாம். தோனி ஏலத்திற்கு வந்தால் பல அணிகள் முட்டிமோதும். நிச்சயம் ரூ. 10 கோடிக்கு மேல் அவர் ஏலம் போவார். இருப்பினும், இந்த மூன்று அணிகள்தான் அவரை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும்.   

6 /8

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பண்டை விடுவிக்கும் முனைப்பில் டெல்லி அணி இருக்கிறது. அவர்களுக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்கள் தேவைப்படுவதால் தோனியை எடுக்க அதிகம் முயற்சிப்பார்கள். இளம் வீரர்களின் அணியாக டெல்லி இருப்பதால் சரியான தலைமையும், மூத்த வீரரின் அணுகுமுறையும் அதிகம் தேவைப்படுகிறது. ஒருவேளை தோனி வந்தால் அவர் தலைமையில் முதன்முதலாக டெல்லி அணி கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது.   

7 /8

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆர்சிபி அணி நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு எப்போதும் ஆர்வம் காட்டும். இந்த முறை தினேஷ் கார்த்திக்கும் ஓய்வை அறிவித்துவிட்டதால், விக்கெட் கீப்பர் பொறுப்பும் காலியாக இருக்கிறது. ஃபாப் டூ பிளெசிஸ், விராட் கோலி என தோனிக்கு ஏதுவான வீரர்கள் இதில் இருப்பதால் நிச்சயம் ஆர்சிபி எவ்வளவு விலை கொடுத்தாலும் எடுத்து, தங்களின் முதல் கோப்பையை முத்தமிட முயலும்.  

8 /8

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கேஎல் ராகுல் இந்த முறை எல்எஸ்ஜி அணியால் மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கப்படலாம். எனவே, அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஸியை நிரப்ப லக்னோ அணி முடிவெடுக்கும். தோனிக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும் 2017இல் ரைஸ்ஸிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் காலகட்டத்திலேயே பிரச்னை இருந்தது. இவரின் முடிவால்தான் தோனி 2017இல் புனே அணியில் கேப்டன் பொறுப்பை இழந்தார். இருப்பினும் அதன்பின் தோனி தனது தலைமையில் மூன்று ஐபிஎல் கோப்பைகளை பெற்றுவிட்டார் என்பதால் தனது தவறுகளை திருத்திக்கொள்ள சஞ்சீவ் கோயங்கா விரும்பலாம்.