பழி வாங்கிய மும்பை! வெளியேறியது சென்னை!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 12, 2022, 10:46 PM IST
  • ஐபிஎல் பிளே ஆப்பிள் இருந்து சென்னை வெளியேறியது.
  • மிகவும் மோசமான பேட்டிங்கால் 97 ரன்களுக்கு ஆல் அவுட்.
  • எளிதாக வெற்றி பெற்றது மும்பை.
பழி வாங்கிய மும்பை! வெளியேறியது சென்னை! title=

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் விளையாடின.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் மும்பை டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.  சென்னை அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.  இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.  இந்த சீசனில் இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தது.  மும்பை அணி ஏற்கனவே பிளே ஆப்பில் இருந்து வெளியேறி உள்ளது.

 

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

அதிக எதிர்பார்ப்போடு தொடங்கிய இந்த போட்டி சென்னை அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கான்வே LBW முறையில் அவுட் ஆனார்.  ஆனால், மைதானத்தில் ஏற்பட்ட பவர் பிரச்னை காரணமாக ரிவியூ எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  ஆனால், இது அவுட் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.  முதல் ஓவரின் 4வது பந்தில் மெயின் அலியும் அவுட் ஆனார்.  2 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.  இரண்டாவது ஓவரில் உத்தப்பாவும் அவுட் ஆனார்.  ராயுடு, சிவம் துபே, பிராவோ என அடுத்தடுத்து விக்கெட் சரிந்தது.  ஒரு கட்டத்தில் 50 ரன்கள் வருமா என்ற சந்தேகம் எழுந்தது.  ஆனால், தோனி மட்டும் ரன்கள் அடித்து கொண்டிருந்தார்.  இருப்பினும், 16 ஓவரில் சென்னை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே அடித்தது.  

 

மிகவும் எளிய இலக்கை எதிர்த்து களம் இறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.  முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் அவுட் ஆகி வெளியேறினார்.  சிறிது நேரம் தாக்கு பிடித்த ரோஹித் சர்மாவும் 18 ரன்களில் அவுட் ஆனார்.  டேனியல் சாம்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்தது அவுட் ஆகா, மும்பை பக்கம் பிரஷர் எகிறது.  இருப்பினும், திலக் வர்மா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன் நிதானமாக ஆட ஸ்கோர் மெதுவாக ஏறியது.  இறுதியாக மும்பை அணி 14.5 ஓவரில் 103 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.  இதன் மூலம் சென்னை அணி இந்த வருட பிளே ஆப்பிள் இருந்து வெளியேறியது.  

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டி மூலம் ரஷித்கானை தேடி வந்த கவுரவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News