IPL2022; வெளிநாட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல்..! Plan B-ல் UAE இல்லை..!

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் இல்லாமல், வேறு இரு நாடுகளில் நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 13, 2022, 10:48 AM IST
  • ஐ.பி.எல்-ஐ பந்தாடும் கொரோனா
  • எங்கு நடத்துவது என தெரியாமல் பிசிசிஐ குழப்பம்
  • தென்னாப்பிரிக்கா அல்லது இலங்கையில் நடத்த பரிசீலனை
 IPL2022; வெளிநாட்டில் இந்த ஆண்டு ஐ.பி.எல்..! Plan B-ல் UAE இல்லை..! title=

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. ரசிகர்கள் இல்லாமல் இந்தியாவில் முதல் பாதி ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது, வீரர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், தற்காலிகமாக ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 

ALSO READ | ஐபிஎல் 2022 போட்டிகள் தள்ளிவைப்பா?

இந்நிலையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. நாடு முழுவதும் 3வது அலை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா அச்சுறுதலுக்கு இடையே பாதுகாப்பாக நடத்தப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். மும்பையில் மட்டும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த ஆலோசனை நடத்திய பிசிசிஐ, இப்போது வெளிநாடுகளில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ | IPL Auction 2022 ஏலத்தில் பண மழையால் மூழ்கவிருக்கும் இந்திய வீரர்கள்

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடத்துவதிலும் பிசிசிஐக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் 3.30 மணி நேரம் இடைவெளி உள்ளது. அங்கு நடத்தப்பட்டால் முதல் பந்து 4 மணிக்கே வீச வேண்டியிருக்கும். இது ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு, சரியான இடம் குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News