IPL: இறுதிப்போட்டிக்கு செல்ல தோனி செய்யப்போவது என்ன? - சேப்பாக்கத்தில் இதுதான் லாஸ்ட்!

IPL Qualifier 1 GT vs CSK: இறுதிப்போட்டிக்கான தகுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் நாளை மோத உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகள தன்மை, போட்டி குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 22, 2023, 07:36 PM IST
  • சென்னை அணி இதுவரை குஜராத் அணியை தோற்கடித்தது இல்லை.
  • நாளை போட்டியில் தோல்வியடையும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு செல்லும்.
  • இறுதிப்போட்டி வரும் மே 28ஆம் தேதி நடைபெறுகிறது.
IPL: இறுதிப்போட்டிக்கு செல்ல தோனி செய்யப்போவது என்ன? - சேப்பாக்கத்தில் இதுதான் லாஸ்ட்!  title=

IPL Qualifier 1 GT vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. குவாலிஃபயர் 1 போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கான நேரடி வாய்ப்புக்காக மோத உள்ளனர். இதில் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்கு குவாலிஃபயர் 2இல் மற்றொரு வாய்ப்பளிக்கப்படும்.

சென்னை அணி விளையாடியுள்ள 14 தொடர்களில், 12இல் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இத்தகைய சாதனையை எந்த அணியும் பெறவில்லை. இருப்பினும், இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியதே இல்லை எனலாம். 3 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் குஜராத்தே வென்றுள்ளது.  எனவே, குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல சென்னை முனைப்பு காட்டும்.

மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!

கடைசியாக சேப்பாக்கத்தில்...

தோனி தலைமை வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், இத்தொடரில் கடைசி முறையாக நாளை சேப்பாக்கத்தில் விளையாடுவார்கள். எனவே, வழக்கத்தை விட சிஎஸ்கேவுக்கும், குறிப்பாக தோனிக்கும் டபுள் வரவேற்பு இருக்கும். இருந்தாலும்,  நடப்பு சாம்பியன்களான குஜராத் அணி ஒரு வலிமையான சவாலை சென்னை அணிக்கு அளிப்பாளர்கள். அவர்களின் பார்முலாவே வெற்றியை தங்கள் எதிரிகளுக்கு கடினமான பணியாக மாற்றுவதன்தான். ஆனால், குஜராத் அணி இதுவரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது இல்லை. 

பேட்டர்களுக்கு சாதகம்

அந்த வகையில், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் ஆடுகள அறிக்கை, புள்ளி விவரங்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இங்கே காணலாம். சென்னையின் சேப்பாக்கத்தில் நடந்த சமீபத்திய ஆட்டங்களில், முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் சுமார் 163 ரன்களாக இருந்தது. இது அதிக ஸ்கோரை சந்திப்பதற்கான சாத்தியத்தைக் குறிக்கிறது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால், நாளைக்கும் ரன் வேட்டை நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் சூழலை பயன்படுத்தி விளையாடவும் வாய்ப்புள்ளது. கூடுதலாக, பனியின் இருப்பு போட்டியின் இறுதி கட்ட ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

டாஸ் முக்கியம் பிகிலு!

சேஸ்ஸிங் மூலம் அணிகள் இந்த சீசனில் நான்கு முறை வெற்றி பெற்றிருந்தாலும், முதலில் பேட்டிங் செய்வது இந்த மைதானத்தில் மிகவும் வெற்றிகரமானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கமாக தோனி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வாரா அல்லது வழக்கத்தை மாற்றி பந்துவீச்சை தேர்வு செய்வாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 1இல் இரு அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று உறுதியாகிறது. குஜராத் டைட்டன்ஸ் ஒரு திறமையான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானைக் கொண்டுள்ளது, 

சுழற்பந்துவீச்சின் ஆதிக்கம்

அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜடேஜா, மொயின் அலி, தீக்ஷனா உள்ளட்டோரை வைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், வேகப்பந்து வீச்சாளர்கள் 56% விக்கெட்டுகளைப் பெற்றுள்ளனர், மீதமுள்ள 44% விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் எடுத்துள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்கள் தான் நாளைய போட்டியில் திருப்புமுனையாக இருப்பார்கள். தோனி தனது மேஜிக்கை இதில் மீண்டும் நிகழ்த்துவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிளேயிங் லெவன்

சென்னை: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு (பதிரானா), சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

குஜராத்: சுப்மன் கில், விருத்திமான் சாஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், தசுன் ஷனகா, ராகுல் தெவாடியா, மோகித் சர்மா (விஜய் சங்கர்), ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது.

மேலும் படிக்க | IPL 2023: கோடிகள் கொடுத்தும் பயனில்லை... ஏலத்தில் எடுத்த இந்த 4 வீரர்களை கழட்டிவிடும் அணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News