ICC T20 World Cup: இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து.. மழையால் கவிழ்ந்தது கப்பல்!

மழை காரணமாக, இங்கிலாந்து அணியை டிஎல்எஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2022, 02:45 PM IST
  • மழை குறுக்கிட்டதால், டிஎல்எஸ் முறை கணக்கிடப்பட்டது.
  • இங்கிலாந்து அணி மந்தமான பேட்டிங்கால் நூழிலையில் போட்டியை நழுவவிட்டுள்ளது.
  • சூப்பர் 12 முதல் பிரிவில் 6இல் 5 அணிகள் தலா 1 வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் உள்ளன.
ICC T20 World Cup: இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த அயர்லாந்து.. மழையால் கவிழ்ந்தது கப்பல்! title=

ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி சூப்பர் 12 போட்டிகள் தொடங்கின. 

அந்த வகையில், சூப்பர் 12 சுற்றின் முதல் சுற்றில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் இன்று மோதின. குரூப் சுற்றில், அயர்லாந்து அணி, மேற்கு இந்திய தீவுகள், ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் 12 சுற்று தகுதிபெற்றிருந்தது. குறிப்பாக மேற்கு இந்திய தீவுகளை தொடரில் இருந்து அயர்லாந்து அணிதான் வெளியேற்றியிருந்தது. 

அதுமட்டுமின்றி, 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில், இங்கிலாந்து அணி, அயர்லாந்து அணியிடம் தோல்வியுற்றது நினைவுக்கூரத்தக்கது. எனவே, அயர்லாந்து - இங்கிலாந்து போட்டி மீதும் சிறிது எதிர்பார்ப்பு இருந்தது. 

மேலும் படிக்க | IND vs PAK : அவரு எங்கையோ போய்ட்டாருங்க... அஸ்வினை கொண்டாடி தீர்த்த கோலி

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 19.2 ஓவர்களுக்கு 157 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. 12 ஓவர்களில் 103 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டுமே இழந்த அயர்லாந்து, அடுத்த 7.2 ஓவர்களில் 54 ரன்களை மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 62 ரன்களை எடுத்தார். 

இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில், மார்க் வுட், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

மேலும் படிக்க | இந்திய அணிக்கு கொடுக்கப்படும் தரமில்லாத உணவுகள்! வேண்டுமென்றே சதியா?

இதைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் ஜாஸ் பட்லர் டக் அவுட்டாகி வெளியேற, அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால், பவர்பிளே முடிவில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 

தொடர்ந்து, மலான் - ப்ரூக் சற்றுநேரம் தாக்குபிடித்தாலும், அவர்களும் பொறுமையாகவே விளையாடினர். இதனால், தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கு மேல் அதிகரித்தது. இருப்பினும், ப்ரூக் 18 ரன்களிலும், மலான் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, மொயின் அலி சற்று அதிரடி காட்ட தொடங்கினார். 14.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி 105 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. 

மழை தொடர்ந்து நீடித்ததால், டிஎல்எல் முறை கணக்கிடப்பட்டது. அதில், இங்கிலாந்து அணி, அயர்லாந்தை விட 5 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதன்மூலம், டிஎல்எஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாச்சத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக அயர்லாந்து அணி கேப்டன் பால்பிர்னி தேர்வானார்.

சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில் ஆஃப்கானிஸ்தான் அணியை தவிர மற்ற 5 அணிகளும் தலா 1 வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுள்ளனர். அதன்மூலம், புள்ளிப்பட்டியலில், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முறையே முதலிடத்தில் இருந்து ஆறாமிடம் வரை உள்ளன. 

மேலும், அதே பிரிவில் இடம்பெற்றுள்ள, நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அதே மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மழை காரணமாக தாமதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | SA vs ZIM போட்டி ரத்தால் சிக்கலில் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News