மிட்செல் ஸ்டார்க்: குஜராத்திடம் சோலி போட்டு 24 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா.!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடருக்கு திரும்பியிருக்கும் நிலையில் அவரை 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. குஜராத் அணி கடுமையாக போட்டி போட்டபோதும் விடாமல் வாங்கிவிட்டது கேகேஆர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2023, 06:13 PM IST
  • மிட்செல் ஸ்டார்கிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்
  • 24 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
  • குஜராத் அணியிடம் போட்டி போட்டு வாங்கியது கேகேஆர்
மிட்செல் ஸ்டார்க்:  குஜராத்திடம் சோலி போட்டு 24 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா.! title=

மிட்செல் ஸ்டார்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு திரும்பியிருக்கும் நிலையில் எதிர்பார்த்து போலவே அவருக்கு செம டிமாண்ட் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிக் கொண்டிருந்த நிலையில் இடையில் ஆர்சிபி அணியும் கோதாவில் குதித்தது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியிடம் 23 கோடி ரூபாய் மட்டுமே கைவசம் இருந்தபோதுகூட 20 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்க ஏலம் கேட்டது. ஆனால், குஜராத் மற்றும் கொல்கத்தா விடவே இல்லை. ஆரம்பத்தில் ஒரு இடத்தில் மும்பை அணியும் ஸ்டார்க்குக்காக மோதியது. ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே போதுமான அளவு வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்டார்க் மேல் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் படிக்க - LIVE | IPL 2024 Auction Updates : தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்... கோடிகளில் புரளப்போவது யார் யார்?

20 கோடி ரூபாயைக் கடந்தபோது கூட ஸ்டார்க்கிற்கு ஜாக்பாட் அடித்துக் கொண்டே இருந்தது. ஸ்டார்க் ஏலத்துக்கு வருவதற்கு முன்பு பாட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றிருந்தார். ஒரு ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிளேயர் என்ற சாதனையும் அவர் வசம் இருந்தது. ஆனால் அது ரொம்ப நேரம் எல்லாம் நீடிக்கவில்லை. ஒரு சில மணி நேரங்களில் ஸ்டார்க் அடித்து நொறுக்கிவிட்டார். கவுதம் காம்பீர் ஆலோசகராக இருக்கும் கொல்கத்தா அணி, குஜராத் அணி எவ்வளவு முயன்றபோதும் வாய்ப்பு கொடுக்காமல் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொட்டிக் கொடுத்த ஐபிஎல் அணிகள் ஸ்டார்கிற்கு அடுத்தபடியாக ஏலத்துக்கு வந்த ஹேசில்வுட்டை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு வந்தார் ஹேசில்வுட். அவரை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதன் பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது. ஹேசில்வுட் ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் விளையாடமாட்டார். அவர் மே மாதம், அதாவது ஐபிஎல் இறுதிக் கட்டத்தில் மட்டுமே விளையாட வருவார் என்பதால் ஹேசில்வுட்டை யாரும் வாங்கவில்லை. 

இந்த ஏலத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருந்தது. டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் இதுவரை இல்லாத தொகைக்கு ஐபிஎல் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கின்றனர். ஸ்டார்க்கை பொறுத்தவரையில் இதுவரை விளையாடாத ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரே ஐபிஎல்லில் ஊதியம் பெற்றுவிட்டார்.  

மேலும் படிக்க - IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News