IPL 2024 Auction Updates, IPL Team Players Auction: ஐபிஎல் என்றாலே பலருக்கும் டக்கென நியாபகம் வருவது ஏலம்தான். கிரிக்கெட் வீரர்களை ஏலம் மூலம் எடுப்பதை 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் நடைமுறையில் இருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அணிகள் மொத்தமாக கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்படும். இதற்கிடையில் ஒவ்வொரு சீசனுக்கும் முன் மினி ஏலம் நடைபெறும்.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ள 17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான வீரர்களை எடுக்கும் மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. வெறும் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் கடும் போட்டியில் ஈடுபடுகின்றனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்டர்கள், இந்திய ஆல்ரவுண்டர்கள், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள், வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் என ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு தேவைகள், வெவ்வேறு இடங்களில் உள்ளன.
தற்போது தேசிய அணிக்காக விளைாடிய வீரர்களுக்கான (Capped Players) ஏலம் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, தேசிய அணிக்கு விளையாடாத வீரர்களுக்கான (Uncapped Players) ஏலம் அடுத்து நடைபெற உள்ளது. ஐபிஎல் மினி ஏலம் குறித்த உடனடி தகவல்களுக்கு இந்த பக்கத்தை பின்தொடருங்கள்.