மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தல தோனி! இந்த முறை என்ன பொறுப்பு தெரியுமா?

டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதி தோல்விக்குப் பிறகு எம்எஸ் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Nov 15, 2022, 11:01 AM IST
  • 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார் தோனி.
  • தோனியை இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ பேச்சுவார்த்தை.
  • ஐபிஎல் 2023க்கு பிறகு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பு.
மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தல தோனி! இந்த முறை என்ன பொறுப்பு தெரியுமா? title=

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் அணியில் இல்லாத போதிலும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த கடும் தோல்வியைத் தொடர்ந்து, இந்தியா அணிக்கு எதிராக பெரும் விமர்சனங்கள் எழுந்தன. என்ன தவறு நடந்தது என்று விவாதிக்க பிசிசிஐ சமீபத்தில் வீரர்களுடன் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

மேலும் படிக்க | தோனி செய்த கடைசி நிமிட மாற்றம்! இந்த வீரர்கள் CSK-யில் இனி இல்லை!

ஐ.சி.சி பட்டங்களை வென்ற அனுபவமுள்ள தோனியை மீண்டும் அணியில் சேர்க்க இந்திய வாரியம் விரும்புகிறது. 2023 சீசனுக்குப் பிறகு தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், பின்பு அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.  பிசிசிஐ தோனியின் அனுபவம் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்கு உள்ள புத்திசாலித்தனத்தை சரியான முறையில் பயன்படுத்த ஆர்வமாக உள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2021 டி20 உலகக் கோப்பையின் போது தோனி இந்திய அணியுடன் பணியாற்றினார்.  இருப்பினும் ஆரம்ப சுற்றில் இந்தியா வெளியேறியது.  

போதுமான கால இடைவெளி இல்லாததால் தோனியால் சரியான பயிற்சியை வழங்க முடியவில்லை.  தோனி அணிக்குள் வந்தால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிச்சுமையை குறைக்கும். ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும், அவரிடமிருந்து ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் கோப்பையை வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | டி20 போட்டிகளில் ஓய்வை அறிவிக்கும் மூன்று முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News