தோனிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது - ஆர் ஸ்ரீதர் விளக்கம்!

வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பும் போது தோனி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டார் என்று முன்னாள் வீரர் ஆர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 10, 2022, 09:55 AM IST
  • 2019ம் ஆண்டு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
  • தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.
  • அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
தோனிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது - ஆர் ஸ்ரீதர் விளக்கம்! title=

இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி கொண்டு வந்த புது புது மாற்றங்கள் மற்றும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை.  2007-ல், தோனி இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார், அதன் பிறகு இந்திய கிரிக்கெட் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.  இவரது தலைமையில் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்தியா வென்றது.  தோனி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதலிடத்தைப் பிடிக்க செய்தார்.  பலர் செய்ய பயப்படும், செய்யாத பல முக்கிய மாற்றங்களை அணியில் புகுத்தி வெற்றியும் பெற்றார்.  

தோனி தான் ரோஹித் ஷர்மாவை ODI-களில் ஓப்பனிங் வீரராக மாற்றினார்.  முன்பு ரோஹித் 6 அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.  ஆரம்ப டெஸ்ட் போட்டிகளில் கோலி சொதப்பி வந்த போதிலும் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்தார் தோனி.  இந்த இரண்டு வீரர்களும் தற்போது இருக்கும் உயரம் பற்றி புதிதாக சொல்லவேண்டிய தேவை இல்லை.  இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் மிகப்பெரிய பங்களிப்பு, ஆட்டத்தை சித்தரித்த விதம்தான். பல ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட்டின் இரண்டு அம்சங்களாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமே இருந்தது, ஆனால் தோனியின் கீழ், பீல்டிங் மற்றும் உடற்தகுதி சமமான கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறத் தொடங்கியது.

மேலும் படிக்க | நியூசிலாந்து அணியில் இருந்து விலகிய டிரெண்ட் போல்ட்!

முன்னாள் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், தோனிக்கு பேட்டிங், பந்துவீச்சை தவிர பீல்டிங் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதை முக்கியத்துவமாக கருதுவார் என்று கூறியுள்ளார்.  2014ல் தோனி கேப்டனாக இருந்த போது ஸ்ரீதர் அணியில் இணைந்தார்.  “எம்.எஸ் கேப்டனாக இருந்தபோது பீல்டிங்கை முக்கியமாக வழிநடத்தினார். மேலும் விக்கெட்டுக்கு இடையே ஓடுவதையும் முக்கிய காரணியாக பார்ப்பார். ‘பீல்டிங் மற்றும் விக்கெட்டுக்கு இடையே ஓடுவது எனக்கு பேரம் பேச முடியாத இரண்டு விஷயங்கள்’ என்று தோனி கூறுவார்.  மேலும் பீல்டிங்கிற்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை விராட் முன்னெடுத்துச் சென்றார். அதனால் ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது,” என்று ஸ்ரீதர் கூறினார்.

மேலும் படிக்க | Asia Cup 2022: ஆசிய கோப்பை 2022க்கான இந்திய அணி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News