ஷாருக்கானை தொடர்ந்து ஐபிஎல்லில் தடம்பதிக்க விரும்பும் சல்மான்கான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானும் தடம் பதிக்க விரும்புகிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 13, 2022, 05:50 PM IST
  • இந்திய கிரிக்கெட் வீரர் சல்மான்கான்
  • ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்
  • ராகுல் டிராவிட்டுக்கு புகழராம்
ஷாருக்கானை தொடர்ந்து ஐபிஎல்லில் தடம்பதிக்க விரும்பும் சல்மான்கான் title=

உலகளவில் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்காக உருமாறியிருக்கும் ஐபிஎல் தொடரில் ஷாருக்கானைத் தொடர்ந்து சல்மான்கான் தடம்பதிக்க விரும்புகிறார். சல்மான்கான் என்றதும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இவர் ராஜஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர். தமிழக வீரர் ஷாருக்கானை விட 4 ஆண்டுகள் இளையவர். இவருக்கும் ஷாருக்கான் பேட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்!

துடிப்பான பேட்டிங் மூலம் கவனத்தை ஈர்த்திருக்கும் இவர், ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். அவரின் கனவு குறித்து பேசிய சல்மான்கான், ’ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் ஷாருக்கானும் ஒருவர். அவருடைய பேட்டிங்கை பார்த்து வியந்திருக்கிறேன். மிடில் ஆர்டரில் இறங்கி பந்தை தெளிவாக எல்லைக்கோட்டுக்கு வெளியே அடிப்பார். அவருடைய திடமான பார்வை மற்றும் ஷாட் சலெக்ஷன் எனக்கு பிடிக்கும்.

அடிக்கடி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு மெசேஜ் செய்வேன். அவர் எப்போதெல்லாம் என்னுடைய மெசேஜை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் தவறாமல் ரிப்ளை செய்துவிடுவார்" எனத் தெரிவித்தார். 8 வயது முதல் கிரிக்கெட் விளையாடும் சல்மான்கான் ரஞ்சி டிராபில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 173 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆசியபோட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது, பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். ஒன்று இரண்டு ரன்கள் விளையாட்டின் போக்கை எப்படி மாற்றும் என டிராவிட் தான் கற்றுக் கொடுத்தாக கூறும் சல்மான்கான் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க | IND Vs SA 2nd T20: ஒரே மேட்சில் பல சாதனைகளை படைத்துள்ள இந்திய பவுலர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News