தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியும் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தபோதும் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சால் பல பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.
மேலும் படிக்க | மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட இந்திய - ஆப்கானிஸ்தான் வீரர்கள்!
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான புவனேஷ்வர் குமார், அந்தப் போட்டியில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே 20 ஓவர் போட்டிகளில் அவரின் சர்வதேச சிறந்த பந்துவீச்சாக இருந்தது. ஆனால், இந்த போட்டியில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அந்த ரெக்கார்டை முறியடித்தார். மேலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
அதாவது அஸ்வின் சாதனையை முறியடித்து இந்தப் பட்டியலில் தன்னை இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றிக் கொண்டுள்ளார். இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் 61 போட்டிகளில் விளையாடி இருக்கும் புவனேஷ்வர் குமார் இதுவரை 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் 69 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 62 விக்கெட்டுகளுடன் பும்ரா 3வது இடத்திலும், 61 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 4வது இடத்திலும் இருக்கின்றனர்.
இதுதவிர ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் புவனேஷ்வர் குமார் மட்டுமே உள்ளார். இவர் இதுவரை மூன்று முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரைத் தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் ஒருமுறைக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை. மேலும், 50வது முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR