IPL 2020; SRH vs CSK: 20 ஓவர் முடிவில் CSK அணி ரன்கள் 167 எடுத்துள்ளது

இன்றைய போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 13, 2020, 09:29 PM IST
  • 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள்.
  • ஹைதராபாத் அணி வெற்றி பெற 168 ரன்கள் தேவை.
  • புள்ளிகள் அட்டவணையில் ஐதராபாத் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழாவது இடத்தில் உள்ளது.
IPL 2020; SRH vs CSK: 20 ஓவர் முடிவில் CSK அணி ரன்கள் 167 எடுத்துள்ளது title=

முழுவிவரங்களைக் காண LIVE Score CSK vs SRH


Chennai Super Kings vs Sunrisers Hyderabad: இந்த ஆண்டு இந்தியன் லீக் (IPL 2020) தொடரின் 29 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற CSK அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. வழக்கக்த்துக்கு மாறாக, இன்றைய போட்டியில் தொடக்க வீரராக ஷேன் வாட்சனுக்கு பதிலா சாம் குர்ரன் களம் இறங்கினார். ஆனால் ஆரம்பமே சென்னை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், ஃபாஃப் டு பிளெசிஸ் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் அவுட் ஆனார். பின்னர் வந்த ஷேன் வாட்சன் மற்றும் சாம் குர்ரன் ஆடினார்கள். சாம் குர்ரன் அதிரடியா ஆடி வந்த நிலையில், சாம் குர்ரன் 31(21) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த அனைவரும் தங்கள் பங்களிப்பை செய்ய 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் சார்பில் டி நடராஜன், சந்தீப் சர்மா மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்கள். ஹைதராபாத் அணி வெற்றி பெற 168 ரன்கள் தேவை.

ALSO READ | IPL 2020: ‘திரும்பி வா சின்ன தல’ Suresh Raina-ஐ அழைக்கும் CSK fans!!

இந்த சீசனின் லீக் கட்டத்தின் பாதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, புள்ளிகள் அட்டவணையில் ஐதராபாத் ஐந்தாவது இடத்தையும், சென்னை ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிஎஸ்கே (Chennai Super Kings) வெறும் 4 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. மகேந்திர சிங் தோனியின் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற வேண்டும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News