டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி...? - முழு விவரம்

வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றிபெறும் அணிக்கான பரிசுத்தொகை உள்ளிட்ட அனைத்து பரிசுத்தொகை விவரங்களையும் ஐசிசி அறிவித்துள்ளது.        

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2022, 04:08 PM IST
  • டி20 உலகக்கோப்பை அக். 16 முதல் நவ. 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
  • தகுதிச்சுற்று போட்டிகள் அக்.16ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
  • சூப்பர் 12 சுற்றுகள் அக்.22ஆம் தேதி தொடங்குகிறது.
டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி...? - முழு விவரம் title=

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது. தகுதிச்சுற்று அக்.21ஆம் தேதி நிறைவேறும் நிலையில், சூப்பர் 12 சுற்று அக்.22ஆம் தேதி தொடங்குகிறது. 

நவ. 9,10 தேதிகளில் அரையிறுதிப்போட்டிகளும், நவ.13ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது. உலக கோப்பை தொடரை முன்னிட்டு, அனைத்து அணிகளும் தங்களின் ஸ்குவாட்டை அறிவித்துள்ள நிலையில், அதற்கென பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், உலகக்கோப்பை தொடரின் பரிசுத்தொகை குறித்த அறிவிப்புகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக்கோப்பை வெல்லும் அணியின் பரிசுத்தொகை, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. 

அதில், மெல்போர்ன் நகரில் நவ.13ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று, உலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 13 கோடி) பரிசுத்தொகையாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும் பரிசின் பாதித்தொகை (சுமார் ரூ. 6.5 கோடி)இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | உலகக்கோப்பை கனவு 'அம்போ' - இந்திய அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்!

மேலும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 3.25 கோடி ) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுப்பர் - 12 சுற்றோடு வெளியேறும் எட்டு அணிகளும் தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.57 லட்சம்) கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு உலகக்கோப்பையை போலவே, இந்தாண்டும் சுப்பர்-12 தொடரில் ஒரு போட்டியை வென்றால் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 32.54 லட்சம்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் -12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுள்ளன. 

மற்ற 8 எட்டு அணிகள் தகுதிச்சுற்றில், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சுற்றின் முடிவில், இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிபெறும். நமீபியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஆகிய அணிகள் ஏ-பிரிவிலும், மேற்கு இந்திய தீவுகள், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பி-பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் குரூப் போட்டியில் பெறும் வெற்றிக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 32.54 லட்சம்) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | சரியான நேரத்தில் கோலி ஃபார்மில் இருக்கிறார் - நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News