தமிழக வனத்துறை அதிகாரிகள் 6 பேர் பாலக்காட்டில் சிறைபிடிப்பு

ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறை பிடித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 07:56 PM IST
தமிழக வனத்துறை அதிகாரிகள் 6 பேர் பாலக்காட்டில் சிறைபிடிப்பு title=

கோவை மாவட்டம், நவகரை அருகே ரயில் மோதியதில் குட்டியானை உட்பட மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தன. இரவு நேரத்தில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாரதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் இறந்த யானைகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். 

ALSO READ பயணிகளின் கவனத்திற்கு; 157 ரயில்கள் இன்று இயங்காது

இந்த  சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்று ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறை பிடித்துள்ளனர்.

tnpolise

தமிழக வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் வனக்காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு ரயில் நிலையத்தில்  சிறைபிடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில்  தெரிவித்துள்ளனர்.  சட்டவிரோதமாக தமிழக வனத்துறை ஊழியர்கள் சிறைபிடிக்கபட்டுள்ள நிலையில்  வனத்துறையினரை மீட்க கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக வனத்துறை அதிகாரிகள் 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ யானை விபத்து; லோகோ பைலட்டுகளை கைது செய்தால் போராட்டம் - எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News