யானை விபத்து; லோகோ பைலட்டுகளை கைது செய்தால் போராட்டம் - எச்சரிக்கை

கோவையில் ரயில்கள் மோதி யானைகள் இறந்த விபத்தில் லோகோ பைலட்டுகளை கைது செய்தால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கேரள லோகோ பைலட் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 05:50 PM IST
யானை விபத்து; லோகோ பைலட்டுகளை கைது செய்தால் போராட்டம் - எச்சரிக்கை title=

கோவை மாவட்டம், நவகரை அருகே ரயில் மோதியதில் குட்டியானை உட்பட மூன்று காட்டுயானைகள் உயிரிழந்தன. இரவு நேரத்தில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது, எதிர்பாரதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் இறந்த யானைகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். வனத்துறை மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் இறந்த யானைகளை பரிசோதனை செய்தனர்.

ALSO READ Rain Dance by snakes! இது தமிழ்நாடு பாம்புகளின் உல்லாச மழை நடனம்!

அதில், ரயில் 45 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்று மோதியதால், யானைகள் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன என தெரிவித்தனர். வனப்பகுதிக்குள் 45 கிலோ மீட்டருக்கும் மேல் ரயில்களை இயக்கக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், அதனைமீறி ரயிலை வேகமாக இயக்கிய கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் சுபைர் மற்றும் உதவியாளர் அகில் ஆகியோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வனத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கேரள லோகோ பைலட் சங்கம், ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் லோகோ பைலட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

elephant

லோகோ பைலட்டுகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை எடுத்தால், நாடு தழுவிய அளவில் லோகோ பைலட்டுகள் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரித்துள்ளனர். ரயில்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வனப்பகுதிகளில் ரயில்கள் மோதி யானைகள் இறக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நவக்கரைப் பகுதியில் இதற்கு முன்பாகவும் ரயில் மோதி யானைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் யானைகள் ரயில்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க அரசு மற்றும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ வால்பாறையில் பொதுமக்களை மிரட்டும் காட்டுயானைகள் கூட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News