அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் பற்றிய தனது கருத்தைத் தெரிவித்தார்.
புதிதாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
மேலும் படிக்க | “பொய் பிரச்சாரம்” திமுக-வை கலாய்த்தாரா விஜய்?!
புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் ஜெகன் மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது, உரையாற்றிய அவர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், இதனால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ள நிலையில் காவல்துறையினர் தங்களை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புள்ளது என கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலத்தில் எழுதப்படாமல் அதன் பெயர்கள் சமஸ்கிருதத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் எனவும் மத்திய அரசு உடனே இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும் படிக்க | 'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?
புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த மூன்று அரசியலமைப்பு சட்டங்களையும் புரட்சி பாரதம் கட்சி வன்மையாக எதிர்ப்பதாகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது எனவும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், நீட் விலக்கு, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துக்களை தமிழக வெற்றிக்காக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளது குறித்து கேள்விக்கு அவர் பதிலளித்தார். அரசியலில் நடிகர் விஜய் தற்பொழுது ஒன்றாம் வகுப்பு படிக்கிறார் முதலில் அதில் தேர்ச்சி பெற்று வரட்டும் பின்னர் பார்க்கலாம் எனவும் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி விமர்சித்தார்.
பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணாக்கர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விருது வழங்கினார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் நீட் தேர்வு தொடர்பாக பேசியிருந்தார், அது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தற்போது கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ