ஜூலை 24 முதல் 30 வரை மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வாங்க பள்ளிகளுக்கு செல்ல அனுமதி

தற்காலிக மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பெற்றுக்கொள்ள மாணவர்கள் ஜூலை 24 முதல் ஜூலை 30 வரை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2020, 04:33 PM IST
ஜூலை 24 முதல் 30 வரை மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வாங்க பள்ளிகளுக்கு செல்ல அனுமதி title=

சென்னை: சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி தற்காலிக மதிப்பெண்கள் (Marksheets) அடங்கிய பட்டியலை பெற்றுக்கொள்ள மாணவர்கள் ஜூலை 24 முதல் ஜூலை 30 வரை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதித்ததோடு, ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்யவோ அல்லது மறுமதிப்பீடு செய்யவோ நாளை முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என தலைமைச் செயலாளர் (TN Chief Secretary) உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், மாணவர்கள் பள்ளி செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, தற்காலிக மதிப்பெண்களை விநியோகிப்பதற்காக ஜூலை 24 முதல் ஜூலை 30 வரை மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க அரசு தேர்வுகள் இயக்குநரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

ALSO READ | பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

பரிந்துரைக்கப்பட்ட சமூக தொலைதூர (social distancing) விதிமுறைகளின்படி, மாணவர்கள் அல்லது பெற்றோர்களுக்கு தற்காலிக மதிப்பெண்கள் வழங்கப்படும், அவர்கள் முகமூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பள்ளிகளில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைபடி, சமூக இடைவெளியுடன் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஒரு இடத்தில் ஒன்றாக கூடக்கூடாது. 

பள்ளி ஊழியர்கள் கையுறைகளை (Gloves) அணிய வேண்டும் மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி இரண்டு வகுப்பறைகள் விட்டு மாணவர்கள் அல்லது பெற்றோர்களுக்கான காத்திருப்பு அறைகளை ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் கட்டுப்பாட்டு மண்டலம் சாதாரணமாக அறிவிக்கப்பட்டதும் மார்க் சான்றிதழ்களை சேகரிக்க பள்ளிக்கு வருமாறு

ALSO READ | 9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைப்பு.

Trending News