கல்வியார்களின் ஆலோசனைப்படி 9 முதல் 12ஆம் வகுப்பு CBSE பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்..!
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை CBSE பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். 30% பாடச் சுமையை குறைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பாடச் சுமையை குறைக்க தாம் அறிவுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், CBSE வாரியம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிஷாங்க் கூறினார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் குறிப்பிட்டுள்ளதாவது.... "CBSE பாடத்திட்டத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் CBSE பாடத்திட்டத்தில் 30% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
READ | அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து முகமூடி, சானிடைசர் நீக்கம்: அரசு!
மேலும், CBSE பாடங்களை குறைப்பது குறித்து அனைத்து கல்வியாளர்களிடம் இருந்தும் பரிந்துரைகள் கேட்கப்பட்டன. அதன்படி, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவினை எடுப்பதற்காக உதவிய அனைத்து கல்வியாளர்களும் நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Considering the importance of learning achievement, it has been decided to rationalize syllabus up to 30% by retaining the core concepts.@PMOIndia @HMOIndia @HRDMinistry @mygovindia @transformIndia @cbseindia29 @mygovindia
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 7, 2020
முன்னதாக கரோனா பரவல் அதிகரிப்பால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த கல்வியாண்டில் கூட நடத்த முடியாத பொதுத் தேர்வுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் சூழ்நிலையால் CBSE பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
முன்பு, மனிகண்ட்ரோல் CBSE-க்கு சென்றபோது, வாரிய செய்தித் தொடர்பாளர் இந்த விஷயத்தில் NCERT ஒரு முடிவை எடுக்கும் என்று கூறியிருந்தார். சமூக ஊடகங்களில் பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைத்துள்ளது. இதுவரை, பெரும்பாலான பரிந்துரைகள் பாடத்திட்டத்தை 30-45 சதவிகிதம் குறைக்க முயன்றன, குறிப்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கு.